பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

க. அயோத்திதாஸப் பண்டிதர்



பாபஞ் செய்யாதிருங்கள், நன்மைக்கடைபிடியுங்கள், உங்களிதயத்தைச் சுத்திச் செய்யுங்கள் எனும் மும்மொழிகளே திரிபேத வாக்கியங்களென வழங்கும், இம்மொழி மூன்றையும் சிரமேற்கொண்டு தங்களுக்குள் உள்ள பாபச் செயல்களையும், குணங்களையும் பற்றற வறுத்தும், இனி சேரும் பாபச் செயல்களை யும், பாபகுணங்களையும் சேரவிடாமலகற்றியும், தங்களுக்குள் உள்ள நன்மைச் செயல்களையும், நன்மைக்குணங் களையும், நாளுக்கு நாள் விருத்தி செய்தும் இனி சேரும், நன்மைக் குணங்களையும், செயல்களையும் நாளுக்குநாள் சேர்த்தும், தங்களுள்ளமாம் இதயத்திலுள்ளக் களங்கங்களை யகற்றி நாளுக்கு நாள் சுத்திசெய்து கொண்டும், இதில் இதயத்துள் வந்தணுகும் களங்கங்களை அணுகவிடாமல் அகற்றிக் கொண்டும் வரும்படி யான சாதனங்களையே இடைவிடாது சாதிப்பதினால், கண்ணினாற் பார்த்த வஸ்துக்களை மனம் நாடிச் செல்லுவதும், நாவினால் உருசித்த பதார்த்தங்களை மனம் நாடிச் செல்லுதலும், செவியானது இனிதாகக் கேட்ட வார்த்தையை மனம் நாடிச் செல்லுதலும், நாசியால் முகர்ந்த சுகந்தத்தை மனம் நாடிச் செல்லுதலுமாகிய, வைம்புலச் செயல்களற்று பொறிவாயல் முதல் ஐந்தவித்த பலனே வேத மொழியின் மார்க்க பலன்களென்னப்படும். திரிக்குறள் செய்.27 சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்கே யுலகு. பேதவாக்கியங்களாகும் மூன்று அருமையான பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று பெண்ணிச்சையற்றுக் காமத்தை ஜயிக்கின்றான். சீவகசிந்தாமணி செய்.3121 ஆசையார்வமோ டையமின்றியே யோசைபோயுல குண்ண நோற்றி னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் தூயஞானமாய்த் துறக்கமெய்தினார். இத்தகைய பற்றுக்களற்று உபநயனமாம் உள்விழியால் புருவமத்திய சுழிமுனையை நாடிய நிலைக்கே வேத முடி வென் றும், வேத அந்தமென்றும் கூறப்படும்.