பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

25



தாயுமானவர் பைங்கிளியே செய் 300 தூங்கிவிழித் தென்ன பலன் தூங்காமல் துங்கினிற்கும் பாங்குகண்டா என்றோ பலன் காண்பேன் பைங்கிளியே தேவநிலை நனவினிற் சுழுத்தியாகி நன்மகன் பேறு பெற்றான் என்னும் மனத்தின்கண் சொற்பக் களங்கமேனு மணுகா வண்ணம் ஜாக்கிரா ஜாக்கிரத்தினின்று சாந்தம், ஈகை, அன் பென்னுஞ் செயல்களே பெருகி ஜாக்கிரா சொற் பனத்திலுமது வாய் சதா உள்விழியாம் உபநயன பார்வையால் சுழிமுனையை விழித்து நோக்கி ஜாக்கிராசுழித்தியடைந்தபோது தசநாதங்களும் எழுந்தடங்கி சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான். அச்சுயம்பு ஒளியாய் தேயுவின் அகமே இராகத்து வேஷ மோகங்கள் சூடு கொண்டழிப்பது தவிர்ந்த சாந்தம், ஈகை, அன்பென்னும் பெருக்கத்தினால் தேயுவின் அகங் குளிர்ந்து தன்னை யுணர்ந்து புளியம்பழம் போலும் ஓடும் போலும் பிரிந்து மனிதனென்னும் பெயரற்று குளிர்ந்த தேய்வகமாம் தெய்வ மென்னும் ஏழாவது தோற்றப் பெயர் பெறுகின்றான். பூமியிலிருந்து புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி புழுக்கீடாதிகளினின்று மட்சம் பட்சிகள் தோன்றி மட்சம் பட்சிகளினின்று மிருகாதிகள் தோன்றி, மிருகாதிகளினின்று மக்களாம் மனுக்கள் தோன்றி, மனுக்களினின்று தேவர்களாகத் தோன்றும் ஏழாவது தோற்றத்தியல்பு இதுவேயாகும். மனிதனுக்குள்ள தேயுவின் அக்கினியாம் துர்ச்செயல்கள் யாவையும் கற்றி, நற்செயலாந் தேயு குளிர்ந்து, சாந்தம் நிறைந்த விடத்து தேவனென்னும் பெயரும், சருவசீவர்களின்மீது அன்பு பாராட்டி யாதரிக்கும் குளிர்ந்த நிலையடைந்தவிடத்து அந்தணனென்னும் பெயரும் பெறுகின்றான் - பெற்றிருந்தான். திருக்குறள் செய். 30. அந்தணரென்போரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான்.