பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

க. அயோத்திதாஸப் பண்டிதர்


பத்திரகிரியார் ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து தூங்காமற்றூங்கி சுகம் பெருவ தெக்காலம் திரிமந்திரம் அற்றார் பிறவியவரிருகண்களை வைத்தார் புருவத்திடையே நோக்கி ஒத்தேயிருக்க வுலகெலாந் தெரியும் ஏத்தாலுஞ் சாவில்லை இறையவனாமே. அகஸ்தியர் ஞானம் விழித்து மிகுபார்த்திடவே பொறிதான் வீசும் முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும் சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால் சுத்தமென்னு நாதவொலி காதிற் கேழ்க்கும் இழுத்ததென்று நீ கூடத் தொடர்ந்தாயானால் எண்ணொண்ணா பிறப்பிறப் பெய்தும் பாரு அழுத்தி மனக் கேசரத்தினின்று மைந்தா அப்பனே லலாடத்தில் தூங்குவாயே. பாம்பாட்டி சித்தர் ஒங்காரக்கம்பத்தின் உச்சிமேலே உள்ளும் புறம்பையும் அறியவேண்டும் ஆங்காரகோபத்தை யடக்கிவிட்டே ஆனந்த வெள்ளத்தைத் தாக்கிக்கொண்டே போங்கலஞ்சாங்காலம் ரண்டுமறவே புருவமைய சுழிமுனை தனிலே தூங்காமற்றூங்கியே சுகம் பெறவே தொந்தோம் தொந்தொ மென்றாடாய் பாம்பே. அகஸ்தியர் - பரிபாஷை அமுதமிழியோகமது செய்யவென்றால் அப்பனே கால் நீட்டி படுத்துக்கொண்டு மமதையில்லா வலக்கையை முடிமேல்வைத்து வழுத்துப்பூரணத்தை சுழிமுனையை மேவி சமரசமாக வாசியை நீ யிழுத்துக்கொண்டு சமர்த்தாகக் கேசரத்தில் மனதைவைத்தே அமதியொடு பராபரத்தை தரிசித்தேதான் அப்பனே லலாடத்தில் தூங்குவாயே.