பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

33



சூளாமணிதுறவுச்சருக்கம் செய். 68 தெருளாமையால் வினவற்பால தோன்றுண்டு திருவடிகள் செம்பொனாரவிந்த மேத்த விருளாழி யேழுலகுஞ் சூழொளியின் மூழ்க விமையாத செங்கண்ணினிமையோர் வந்தேத்த வுருளாழியானு மொளிமணி முடி மேற்கைவைத் தொருபாலில் வரவுலக நின்னுழையதாக வருளாழி முன் செல்லப்பின் செல்வதென்னோ வடி படாதாய் நின்ற வகன்ஞாலமுண்டோ . சூடாமணி நிகண்டு தொகுதி. காப்பு உலகமெலா மிறைஞ்சி யேத்த உலகெலா முணர்ந்த மூர்த்தி. இவ்வகையாய் புத்தபிரான் உலகெங்குஞ் சுற்றி சத்திய தன்மத்தை மக்களுக்கு விளக்கினாரென்னும் சரித்திராதாரங் களுள்ளதோடு அவரது வுருவத்தைக் காட்டுஞ் சிலைகளும், அவர் சின்மய முத்திரை முதலிய பதினாறு முத்திரைகளைக் காட்டிய உருவச்சிலைகளும், நிருவாணமடைந்த அறப்பள்ளி உருவம் போன்றச் சிலைகளும், உலகெங்கும் காணப்படுவதை அந்தந்த தேச மீயூஜியங்களிலும், ஆர்க்கலாஜிகல் சர்வே புத்தகங்கள் ளாலும் தெரிந்துக் கொள்ளலாம். இருபிறப்பாளராகிய அந்தணர்கள் யாவருக்குத் தந்தையும் ஆதி அந்தணருமாக விளங்கியவரும் புத்தபிரானேயாம். திரிக்குறள் கடவுள் வாழ்த்து அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லார் பிறவாழி நீத்த லரிது. சீவகசிந்தாமணி செய்.2561. திருமறுமார்பினை திலகமுக்குடையினை யருமறை தாங்கிய வந்தணர் தாதையை யருமறை தாங்கிய வந்தணர் தாதைநின் நெரிபுரை மலைமலரிணையடி தொழுதும்.