பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

க. அயோத்திதாஸப் பண்டிதர்



சீவகசிந்தாமணி செய். 366 சாதிப்பைம் பொன்றன் னொளிவெளவித்தகைகுன்றா நீதிச் செல்வம் மேன் மேனீந்தி நிறைவெய்தி | போகிச் செல்வம் பூண்டவரேத்தும் பொலிவினால் ஆதிக்காலத் தந்தணன் காதன் மகனொத்தான். சருவ வுயிர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து சாந்தனிறை வால் ஆதியந்தணராகவும், அந்தணர்களுக்குத் தாதையாயது மன்றி உலக சீர்திருத்தக்காரருள் ஆதியாக விளங்கினவரும் புத்தபிரானேயாம். மணிமேகலை காதை 6 வரி! ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் பாத பீடிகை பணிந்தன ளேத்தி விரசோழியம் போதிநிழலிற் புநிதன் பொலங்கழல் ஆதி யுலகிற்காம். சிலப்பதிகாரம் காதை 11, வரி 3 கோதைதாழ் பிண்டி கொழுநிழலிருந்த ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கி. ஒவ்வோர் மக்களும் நான்கு வாய்மையுணர்ந்து நீதி நெறியின் ஒழுக்கங்களால் தீவினையை அகற்றினோர்கள் யாரோ அவர்களையே தேவர்களென்றழைக்கப்படும். சீவகசிந்தாமணி செய்.249. யாவராயினும் நால்வரைப் பின்னிடில் தேவரென்பது தேறுமிவ்வையகங் காவன் மன்னவர் காய்வன சிந்தியார் நாவினும் முரையார் நவையஞ்சுவார். வேறு செய். 951 கற்றவைப்பதங்கணீராக் கருவினைக் கழுவப்பட்டு மற்றவன், தேவனாகி வானிடு சிலையிற்றோன்றி