பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

35



யிற்றதனுடம்புமின்னா விடரொழித் தினியனாகி யுற்றவனிலையுமெல்லா மோதியி னுணர்ந்து கண்டான். இத்தகைய தேவராகவேண்டிய செயலுள் மனிதனென் னும் பெயரற்று ஏழாவது தோற்றமாகி ஆதிதேவனாக விளங்கியவரும், ஆதிதேவனெனப் போற்றப் பெற்றவரும் புத்தபிரானேயாம். சூடாமணி நிகண்டு தொகுதி.1 செய். 17 தருமராஜன் முன்னிந்திரன்சினன் பஞ்சதாரைவிட்டே அருள்சுரந்தவுணர் கூட்டுந் ததாகதன் ஆதிதேவன். தேகத்தாலுண்டாகுந் தீவினைகள் மூன்றும், வாக்காலுண்டாகுந் தீவினைகள் நான்கும், மனதாலுண்டாகுந் தீவினைகள் மூன்றையு மொழித்து. சீலந்தாங்கி நிற்பவர்களே தேவர்களென்றும், மக்களென்றும், பிரமரென்றும் கூறியுள்ள வைகளில், மணிமேகலை காதை 30. வரி 77 சொல்லியபத்தின் தொகுதியு நீத்து சீலந்தாங்கி தானந்தலைநின்று - மேலென் வகுத்த வொரு மூன்று திரத்து தேவரும் மக்களும் பிரமருமாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயனுகர்வர் ஆதியந்தணரென்றும், ஆதிதேவரென்றும் புத்தபிரானைக் கொண்டாடியது போலவே பிரமமென்றும் அவரையே துதித்திருக்கின்றார்கள். மணிமேகலை காதை 21. வரி49. மருளுடை மாக்கள் மனமாசு கழுவும் பிரம தருமனை பேணினராகி. மக்களுள் நன்மெய்க் கடைபிடித் தொழுகுஞ் சாதனத்தால் கடவுளென்னும் பெயரைப் பெறுகின்றார்கள்.