பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

க. அயோத்திதாஸப் பண்டிதர்



சூடாமணி நிகண்டு தொகுதி.1 செய்.3 ககனம் விண்படை காடென்ப கடவுடே முநி நன்மைப்பேர் சீவகசிந்தாமணி செய்.2887 தணக்கிற பறித்தபோதுந் தானளை விடுத்தல் செல்லா நிணப்புடை யுடும்பினாரை யாதினாணீக்கலாகா மணப்புடை மாலைமார்ப னொரு சொலே யேதுவாகக் கணைக்கவினழித்தகண்ணார் துறந்து போய்க் கடவுளானான் இத்தகைய மக்களே கடவுளென்னும் பெயர் பெற்றிருந் ஆதிதும், கடவுளாகப் போற்றப் பெற்றவரும் புத்தபிரானேயாம். சூளாமணி சுருக்கம் 4. செய்.96. ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை யொதிங்கினை போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய சேதியென் செல்வநின் றிருவடி வணங்கினம். மணிமேகலை காதை 11 வரி 54. கடவுள் பீடிகை தொழுதனளேத்தி. சீவகசிந்தாமணி செய்.2713. காதிக்கண்ணறிந்து வென்ற வுலகுணர் கடவுள் காலத் தாதிக்கண் மரங்கள் போன்ற வஞ் சொலீரிதனினுங்கள் காதலிற் காணலுற்ற விடமெலாங் காண்மினென்றா வீதிக்கணின்ற செங்கோனிலவுவீற்றிருந்த பூமான். இவைகளுக்கு முதலாதரவாகத் திருவள்ளுவ நாயனார் தானியற்றியுள்ள திரிக்குறள் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தென்று கூறி, அப்பத்து பாடலிலும் புத்தபிரானையே ஞானசூரியனாக சிந்தித்திருக்கின்றார். மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமென்னு மைம் பொறிகளை யவித்து, காமனை வென்றார்களென்னும் பெண்ணிச்சையை யொழித்தவர்களை ஐந்திரரென்றும், இந்திரரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.