பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

க. அயோத்திதாஸப் பண்டிதர்



றும், மக்கள் கதியிற் சிறந்து தேவகதியாம் சிவகதியடைந்தோ ரென்றுங் கூறியுள்ளார்கள். திருமூலநாயனார் திரிமந்திரம். அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார் அன்பே சிவமாவ தியாருமறிகிலார் அன்பே சிவமாவ தியாருமறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே. சிவயோகசாரம் தானோவகத்தல்ல வென்றறிந்தாற் றாரணியில் லேனோ பிழைத்திடுவா னேழைதான் - றானே யிறவாவதுணீகா ணிற்கவருளின் மறவாதிரு சிவமாவை. சீவகசிந்தாமணி செய்.605 அவம்புரிந்துடம்பு நீங்கா இருந்தவ மூயன்மின் யாருஞ் சிவம்புரி நெறியைச் சேர செப்பமிப் பொருளுங்கேண்மின். காசிக்கலம்பகம் செய். 48 வல்லாண்டமண்டத் தெம்மாதிப் பிரான்வி முத்தத்திலே சில்லாண்டிருந்து சிவமாய் செலுஞ்சில் செந்துக்களே. இத்தகைய வன்பின் மிகுதியால் ஆதிசிவனென்றும் சகலருக்கும் நிருவாண மார்க்கத்தை யூட்டியவராதலால், சிவகதி நாயகனென்றும், ஆதியிற் கொண்டாடப் பெற்றவரும் புத்தபிரானேயாம். அறநெறிச்சாரம் செய்.225 அவன் கொலிவன்கொ லென்றையப்படாதே சிவன்கண்ணே செய்மின்கள் சிந்தை - சிவன்றானும் நின்றுக்கால் சீக்கு நிழறிகழும் பிண்டிக்கீழ் வென்றிச்சீர் முக்குடையான் வேந்து. சீவகசிந்தாமணி செய்.3105 இன்பமற்றென்னும் பேரானெழுந்து புற்கற்றைத் தீற்றித் துன்பத்தைச் சுரக்கு நான்குகதியெனுந் தொழுவிற் சேர்த்து