பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

39



நின்றபற்றார்வ நீக்கி நிருமலன் பாதஞ்சேரி. னன்பு விற்றுண்டு போகிச் சிவகதி யடையலாமே. சூளாமணிசருக்கம் 12 செய். 6 மணிமலர்ந்து மிழொளி வனப்புஞ்சந்தனத் துணிமலர்ந்து மிழ்ந்தருந் தண்மைத் தோற்றமும் நணிமலர் நாற்றமு மென்ன வன்னதா லணிவரு சிவகதி யாவதின்பமே. ஆசியா கண்ட முழுவதும் புத்தகதன்மம் பரவியிருந்த காலத்தில், புத்தபிரானை சிவனென்றும், சிவகதி நாயகனென் றுங் கொண்டாடி , வந்ததுமன்றி, அவரையே மாலென்றும், திருமாலென்றும், செங்கணெடு மாலென்றுஞ் சிந்தித்து வந்தார்கள். பாலிபாஷையில் மால் என்னு மொழிக்கு வட்டம் சக்கிரவாளமென்னும் பொருளைக் குறித்திருக்கின்றார்கள். மணிமேகலையிற் கூறியுள்ளவாறு "எண்ணருஞ் சக்கிர வாளமெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை" உலகெங் குஞ் சுற்றி தருமத்தை நிறப்பின்வராதலின் நெடு மாலென்றும், ஞான விழியால் சகலமு முணர்ந்தவ ராதலின் ஞான நேடுமாலென்றும், பெருங்கூட்டங்களில் நிறைந்திந்த ஒவ்வோர் மநுக்க ளுள்ளங்களிலுமுள்ள சங்கைகளை நிவர்த்தி செய்து வந்தவராதலின் சகலமு முணர்ந்தவரென்றும், ஆயிரங்கண்ண னென்றும், தாமரைக்கண்ணனென்றும், வழங்கிவந்தார்கள். தேவர்களுக்குள் சிறந்தவராகவும், ஆதிதேவனாகவும் விளங்கியவர் புத்தபிரானாதலின் திருவள்ளுவ நாயனார் ரியற்றியுள்ள திருக்குறளுக்கு சாற்றுக்கவி கொடுத்துள்ள . கவிசாகரப் பெருந்தேவனார் திருக்குறள் சாற்றுக்கவி பூவிற்குத் தாமரையே பொன்னுக்கு சாம்புனத மாவிற் கருமுனியா யானைக் - கமரரும்ப றேவிற் திருமாலெனச் சிறந்ததென்பவே பாவிற் வள்ளுவர் வென்பா. எண்ணூற்காப்பு. நெடுமாற் றிருமருகானித்தன் முதலாய்