பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

க. அயோத்திதாஸப் பண்டிதர்



இயமகாதகனென்றும், இயமனை வென்றோனென்றும் காலகாலனென்றும் மரணத்தை ஜயித்தோனென்றுங் கொண்டாடப்பெற்ற புத்தபிரானையும், அவரோதியுள்ள முதனூலாகும் சத்தியதன்ம ஆதிவேதத்தையும், உணர்ந்தவர்கள் எவரோ அவரே பாபத்தை யறுத்து மரணத்தை ஜபித்து நிருவாண மடைவார்களென்று மகாஞானிகளும், சித்தர்களும் வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள்.

சித்தாந்தக் கொத்துமணிகாதை.30 வரி10 உரைமேற்கோள்.

அருணெறியாற் பாரமிதை யாரைந்து முட்னடக்கிப் பொருள் முழுதும் போதிநிழ னன்குணர்ந்த முநிவரன்ற னருள்மொழியா நல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாற் பிறநூலு மயக்கறுக்கு மாறுளதோ.

இடைக்காட்டு சித்தர்.

ஆதிபகவனையே பசுவே யன்பாய் துதிப்பாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்தம தாகாதோ.

வீரசோழியம் யாப்புப்படலம், உதாரணச் செய்.3

தோடாரிலங்கு மலர்கோதிவண்டு வரிபாடு நீடு துணர்சேர் வாடாதபோதி நெறிநிழன்மேய வரதன் பயந்த வறநூல் கோடாதசீல விதமேவி வாய்மை குணனாக நாளுமுயல்வார் வீடாதவின்ப நெறிசேர்வந்துன்ப வினைசேர்த நாளுமிலரே.

சீவகசிந்தாமணிசெய்.1467

வீங்கோத வண்ணன் விரைத்தும்பு பூம்பிண்டித் தேங்கோத முக்குடைக்கீழ் வேதர் பெருமானைத் தேவர் பெருமானைத் தேனார்மலர் சிதறி நாவின விற்றாதார் வீட்டுலக நண்ணாரே.

இத்தகைய பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பத்திற் காளாகாது மரணத்தை ஜயித்த யமகாதகனெவனோ அவனையே யதார்த்தபிராமண னெனப்படும்.