பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

43



மணிமேகலை காதை.30 வரி167 பிறப்பே பிணியே மூப்பே சாவென மொழிந்திடு துன்பமெனவிவை. ஷ காதை .11 வரி61. மாரனை வெல்லும் வீரனின்னடி. ஷை காதை 5 வரி102 காமற்கடந்த யேமமாயோய் சூளாமணிசருக்கம்.4 செய்.97 காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை தேமலர் மாரியை திருமறு மார்பனை தேமலர் மாரியை திருமறு மார்பனை மாமலர் வண்ண நின் மலரடி வணங்கினம். சீவகசிந்தாமணி செய்.3091 சுறவுக்கொடிக் கடவுளோடு காலற்றொலைத்தோயம் பிறவியறுகென்று பிறசிந்தையிலராகி - நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித் துறவுநெறிக் கடவுளடி தூமமொடு தொழுதார். புத்தபிரான் காமனையுங் காலனையுஞ் ஜயித்து நிருவாண மடைந்ததுமன்றி மற்றவர்களது மரணத்துக்கத்தையுஞ் ஜயிக்குந் தன் மத்தை யூட்டியிருக்கின்றார். மணிமேகலை காதை 5 வரி69 சாதுயர்நீக்கிய தலைவன் றவமுநி சங்க தருமன் றாமெனக் கருளிய. சீவகசிந்தாமணிசெய்.1494 கோதையுங் குழலும் பொங்கக் குவிமுலைக் குழங்கன் மாலைப் போதுகப் பொருது பூணும் பொருகடன் முந்து மூழ்க . காதலுங் களிப்பு மிக்குங் கங்குலும் பகலும் விள்ளார் சாதலும் பிறப்புமில்லாத் தன்மை பெற்றவர்களொத்தார்.