பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

க. அயோத்திதாஸப் பண்டிதர்



செயலைக் கண்டு, உலகத்தையே உண்டு உமிழ்கின்றவரென்றும் உலகுண்டோனென்றும் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். சீவகசிந்தாமணி செய். 3093 முழங்கு கடனெற்றி முனைத்தெழுந்த சுடரேபோ லழுங்கல் வினையலற நிமிர்ந் தாங்குலக மூன்றும் விழுங்கியுமிழாது குணம் வித்திலிருந்தோய் நின் னிழுங்கில் குணச் சேவடிக ளேத்தித் தொழுதும் யாம். கடவுளென்றும், பிரமமென்றும், சிவனென்றும், தேவ னென்றும், திருமாலென்றும், புத்தபிரானையே கொண்டாடி வந்ததுமன்றி சுவாமி சாமியென்றும் அவரையே சிந்தித்து வந்தார்கள். சீவகசிந்தாமணிசெய். 3113 பான்மிடை யமிர்தம் போன்று பருகலாம் பயத்தலாகி வானிடை முழக்கிற் கூறி வாலற வமுதமூட்டித் தேனுடை மலர்கள் சிந்தித் திசைதொழச் சென்றபின்னாட் பானுடை யுகலங்கொள்ளச் சாமி நாட்சார்ந்ததன்றே. கமல சூத்திரத்தில் "சகஸ்திர நாம பகவனென்றும், மணிமேகலையில் ஆயிர நாமத்தாழியன் திருவடி "யென்றுங் கொண்டப்பெற்ற புத்தபிரானுக்கு வாயிரத்திற்கு மேற்பட்ட நாமங்களளித்து ஆனந்தம் கொண்டாடியக் காரணங்கள் யாதென்பீரேல் - பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பங்களையுந் தன்னிற்றானே ஒதாமலுணர்ந்து தனது அதி தீவரபக்குவத்தால் காமனையுங் காலனையுஞ்ஜயித்து நிருவாணத் தைத் தானடைந்ததுமன்றி, ஏனைய மக்களையும் ஈடேற்றுவான் வேண்டி உலகெங்குஞ் சுற்றி சத்திய தர்மத்தை யூட்டித் தன்னைப்போல், மற்ற மக்களுங் காமனையுங் காலனையும் வென்று நிருவாணமடையும்படிச் செய்தபடியால், அப் பேரின்பத்தை யனுபவித்தவர்களும், நித்தியானந்தத்தைக் கொண்டவர்களும், சித்தின் நிலையைக் கண்டவர்களும், தங்களுக்குள்ளெழு மானந்தக் கிளர்ச்சியால் ஜகத்குருவை அனந்தானந்தப் பெயர் களாலழைக்கலானார்கள்.