பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முகவுரை


ஆதிகாலத்திய யதார்த்த பிராமணர்க ளென்போர்களைப் பற்றி சொல்லிவைத்த சிற்சில விஷயங்களைச் செவ்வென தெளிந்தோர், இவ்வேஷ பிராமண வேதாந்த விவரத்தையும் பூரணமாக படித்தறிந்தாலன்றி உண்மைப் புலனாகாது. ஒவ்வொரு மதத்தோர்களும் பிராமணன் உண்டு. அவன் மூவகை மனிதர்களுக்குங் கடவுள். அவனை ஒருவருங் குறைக் கூறக்கூடாது அவனை ஒவ்வொருவரும் வணங்கி வழிபட வேண்டும். இல்லையேல் எரிநரகம் வாய்க்குமென்று பெரும்பாலும் பயமுறுத்தி வைத்துவிட்டார்கள். அதினாலேயே நாம் எந்த ஆராய்ச்சியிலிறங்கினாலும், இந்த பிராமண ஆராய்ச்சியில் கவனங்கொள்ளற் கில்லாமற் போய்விட்டது. அப்படியாக கொஞ்சம் நினைவிற்கு வந்தாலும், தெய்வ வம்ஸமாச்சுதே! பிராமணப்பழி நம்குலத்தை வேரறுத்து விடுமே! என்ற எண்ணமுந் தொடர்ந்து நிற்கின்றது. பாரசீக தேசத்தார்களாகிய ஆரிய வேஷபிராமணர்கள் உண்டாக்கிய பிராமணத்துவத்திற்கு ஆதாரமாக இருப்பது அவர்களது முழுமோசடி யென்பது வெளிப்படை. எப்படி எனின் குலமும், அதற்குமேல் வம்ஸமும், அதற்குமேல் ஜாதியும், அதற்குமேல் ஆசாரமும், அதற்குமேல் பிராமணத்துவமுமாக கட்டப் பட்டி ருக்கும் குருட்டு வழியே வேஷ பிராமண வேதாந்த கோட்டைக்கு ஒரு பாதமாகும். மற்றும் சாங்கியம், சடங்கு, ஜோஷியம், எக்கியம், பஞ்சபஸி முதலிய சாஸ்திரக் குப்பைகள் சேர்ந்த இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஆகமங்கள், வேதங்கள், மோக்ஷம், நரகம், சதுர்பதவிகள், அம்மை , இம்மை , மறுமை ஆகிய ஜன்மங்கள், இன்னுமற்ற பொய்களும் திரண்டுருவாகிய மற்றொருபாதமும் இக்கோட்டைக்கு உண்டு. இக்கோட்டைக்குள் நுழைந்து. நாங்கள் இந்துக் களென்றும், இக்கோட்டை நிழலில் ஒதுங்கி நாங்கள் இந்து ஆதிதிராவிடர்களென்றும் புகலும் வல்லவர்கள் கோட்டையின் நிலைமையைப்பற்றி சிறிதும் ஆராய்தற்கின்றி அதை சாஸ்வத மாக எண்ணி காலங்கழித்து வருகின்றார்கள். இவர்களில் சிலர் கோட்டைக் கட்டடத்திற்கு உள் நுழைந்து பார்த்து இதில்