பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

57



உறுதியில்லை என்று முஹமதியர்களாகவும், சிலர் கோட்டை யின் வெளிப்புறத்தையே உற்று நோக்கி கிருஸ்துவர் களாகவும் மாறிவிட்டார்கள். இன்னமும் மாறிக்கொண்டும் வருகின்றார் கள். சிலரோ: இக்கோட்டைக்கு உள்ளும் வெளியுமாக இருந்து காவல் காத்து வருகின்றார்கள். இக் கோட்டையை ஆராய்வதற்கு இடங்கொடாமல் இருக்கின்றார்கள். கோட்டைக்கு சொந்தக் காரர்களாகிய பார்ப்பனர்களின் தேகம் வளையாமல் இருக்க இந்துக்கள் பூஜிக்கின்றார்கள். இவ்வித பூஜையை ஏற்று சுகஜீவியாக வாழ்ந்திருப்பவன்தான் பிராமணனாம். இந்த பிராமணனைத்தான் நாம் வேஷ பிராமணன் என்றும், அவனுடைய கோட்டையை வேஷ பிராமண வேதாந்த மென்றும் சொல்கிறோம். பிராமணன் என்போன் பிறரை வருத்தாமலும் தன்னிற்றான் புத்தி தெளிதல் பெற்று, 2 லகோப காரியாகவும், சகோதரத்வம் நிறைந்தவனாகவும், பஞ்சமா பாதகங்கள் அற்றவனாகவும், அன்பு ஈகை சாந்தம் என்னும் பீடத்தை ஆசனமாகக் கொண்டவனுமாக இருக்க வேண்டும். இவனையே சகல மக்களும் அணுகி நற்புத்தி கற்றுக் கொள்வார்கள். இவ்வித நற்கருத்துக்களின்றி ஒரு தேயத்தார்களை ஸுத்திரரென்றும், தாஸரென்றும், அடிமைக்குட்படுத்தி வைத்து, சதா இம்ஸிப்பது என்ன மரியாதையை உண்டாக்கும்? இந்தியரை பிராமணர், உண்மையில் வென்றாரா? பாரசீக ஆரியர் உண்மையில் பிராமணரா? ஆரியர் இந்திய நாட்டு பூர்வகுடிகளா? இல்லை, இவர்கள்தான் நம் மூதாதைகளை பூர்வகாலத்தில் ஏமாற்றி நம்மை கட்டு படுத்தி அடக்கி வைத்துவிட்டு தாங்கள் மாத்திரம் பார்ப்பார், பார்ப்பார் என்று சொல்லி உயர்ந்துவிட்டார்கள். இவ்வேஷ பிராமணர்கள் நமக்கிட்டுள்ள பெருவிலங்கை இந்நூலிலறிந்து, அதனை யுடைத்து வெளிவந்து உலகோபகாரிகளாக நிற்க சுதேச தெய்வ தூதர்கள் வேண்டுகின்றோம். ஆண்டர்சன் பேட்டை, ஆங்கீரஸ-u மாசி-t" ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலையார். கோலார் தங்கவயல்,