பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேஷபிராமண வேதாந்த விபரம்

சகோதரர்களே! வேஷப் பிராமணன் என்றபோதே அவன் உண்மையான பிராமணன் அல்ல என்பது அதின் பொருளாம் என்பதுங்களுக்குத் தெரியும். அதாவது ஒர் தேயத்தைக் குடி படை யமைச்சுடன் ஆண்டுவரும் அரசனை மன்னனென்றும், இறைவனென்றுங் கொண்டாடி குடி படைகள் யாவும் அவனடைக்கலத்திலு மடங்கினிற்கும் அவனே யதார்த்த ராஜனாவன். ஒர் எளிய குடும்பத்தோன், அவ்வரசனைப்போல் நடையுடை பாவனைக் காட்டி, அரசனென்று சொல்லி நடிப்பானாயின், அவனை வேஷராஜனென்று கூறுவர். இலட்சம் பொன்னுக்கு மேற்பட்ட திரவிய முடையவளை இலட்சுமியென்றால் அவள் இலட். மியே யாவாள். உடுக்கக் கந்தையும் குடிக்கக் கூழுமில்லாதாள் இலட்சுமி யென்றழைக்கப் படுவாளே யாயின், அவள் நாமலட்சுமி யேயாவாள். அதுபோல் நீதியும், நெறியும், வாய்மையும், தண்மையு நிறைந்த ஒருவனை, மற்றும் விவேகிகள் பிராமண னென்றழைப் பார்களன்றி, அப்பிராமணன் தன்னைத்தானே பிராமண னென்று சொல்லித் திரியமாட்டான். பிராமணர் செயலோ, தன்னைப்போல் சருவ உயிர்களை யும் பாதுகாத்தலும், சாந்தகுண பெருக்கமுற்று சகல பற்றுகளு மற்று, சமதர்ம நிலையில் நின்று சருவசீவர்களுக்கும் 2 பகாரியாக விளங்குவார்கள். இவர்களையே யதார்த்த பிராமணரென்று கூறப்படும். இந்நியாயர்களை மகட பானையில் பிம்மணரென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிடபாஷையில் அந்தாரென்ர மழைத்தார்கள்.