பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

க. அயோத்திதாஸப் பண்டிதர்



சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு கூஷத்திரியன் முத்துசாமி யென்னும் பெயர் வைத்துக்கொண்டிருப்பானாயின், அவனை கூஷத்திரிபானென்று மற்றவரறிய முத்துசாமி வர்மா வென்னுந் தொடர்மொழியை சேர்த்துக்கொள்ளல் வேண்டும். ஒரு வைசியன் பொன்னுசாமி யென்னும் பெயரை வைத்துக் கொண்டிருப்பானாயின், அவனை வைசியனென்று மற்றவரறிய பொன்னுசாமி பூதியென்னுந் தொடர்மொழியைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஈதன்றி 14-ம் வசனத்தில் இவர்கள் வருணாசிரம விதிப்படி பிராமணன் பஞ்சு நூலினாலும் க்ஷத்திரியன் சணப்பநூலினாலும், வைசியன் வெள்ளாட்டு மயிரினாலுந் திரித்த பூணூலணை தல்வேண்டும். (மரு) மாமிஷத்தின் விதிவிலக்கு 39-வது வசனம், பிராமணன் செய்யும் எக்கியத்திற்கே பசுக்களை பிரம்மா உண்டு செய்திருக்கின்றார். (மரு) அநத்தியயனம் 99-வது வசனம். சூத்திரன் சமீபத்திலிருக்கும்போது வேதத்தை வாசிக்கப் படாது. (மது) ஆகிதாக்கினி விஷயம் 79-ம் வசனம். ஒரு பிராமணன் பதிதர், சண்டாளர், புழுக்கையர் வண்ணார், செம்படவர் இவர்களுடன் ஒரு மரத்தடியிலேனும் வாசஞ்செய்யப்படாது. (மரு) சங்கரசாதியா னுற்பத்தி 4-ம் வசனம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு வருணந்தவிர ஐந்தாவது வருணங்கிடையாது. (மரு) உதாஹரணம் 122-ம் வசனம். ஒரு சூத்திரன் மோட்சம் வேண்டுமானாலும் பிராமண னையே தொழுது வரவேண்டும். ஜீவனம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுதுக்கொண்டு வரவேண்டும். பராச ஸ்மிருதி முதலத்தியாயம் 22-ம் வசனம். எக்கியத்திற்காகப் பசுக்களைக் கொல்லலாம்.