பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

63



பராச எஸ்மிருதி முதலத்தியாம் 177-ம் வசனம். பிராமணரென்றும் வேதியரென்றும் அழைக்கப் பெற்றோரைக் கடவுள் வேள்வி செய்வதற்கே படைத்தார். பராச ஸ்மிருதி ஆசாரகாண்டம், 164-ம் வசனம். எந்த பிராமணனாயினும் வேதத்தை யோதாமல் வேறு நூற்களைப் போதிக்கின்றானோ, அவன் சூத்திரனுக் கொப்பாவான். இத்தகைய மநுஸ்மிருதி கட்டளைகளையும் பராசஸ்மிருதி கட்டளைகளையுங் குறிக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல்: பவுத்த தன்ம சாஸ்திரிகள் ஏற்படுத்தியிருந்த தொழிற் பெயர்கள் யாவையும் மேல்ஜாதி கீழ்ஜாதி யென்றேற் படுத்தி, அவர்கள் சொல்லிவந்த பிராமணர்கள் செய்கைக்கு மாறுபாடு டையோரை வேஷப்பிராமணரென்று சொன்னோம். இக்கீழ் ஜாதி யென்னும் ஜாதிகளுக்காதாரமாக யேற்படுத்திக்கொண்ட மநுஸ்மிருதி, பராசஸ்மிருதி இவ்விரண்டி. லும் வரைந்துள்ள படிக்கேனும் இவர்கள் வேஷப்பிராமணர்களா? அன்றேல் யதார்த்த பிராமணர்களா வென்பதை வாசகர்களே உணருங்கள். (மரு) பத்தாவது அத்தியாயம் 86, 87, 88, 89, 92. பிராமணன் இரச வஸ்துக்கள், சமைத்த அன்னம், எள்ளு, செம்புக்கல், உப்பு, மனிதர், பசுக்கள், சிவந்த நூல், வஸ்திரம், சணப்பு, பட்டு, கம்பளம், பழம், கிழங்கு, மருந்து, ஜலம், ஆயுதம், விஷம், மாம்ஸம், கற்பூரம், வாசனா திரவியம், பால், தேன், தயிர், எண்ணெய், மது, வெல்லம், தருப்பை, யானை, குதிரை, சிங்கம், பட்சி, சாராயம், அவுரி, அரக்கு இவைகளில் ஒன்றையேனும் விற்கப்படாது. அங்ஙனம் மாம்ஸம், அரக்கு, உப்பு விற்பவன் பதிதனாக மாறிவிடுவது மன்றி, பால் விற்பவன் மூன்று தினத்தில் சூத்திரனாகிவிடுகின்றான் என்று யேற்படுத்தியிருக்கும் இவர்கள் மநுதர்ம சாஸ்திரத்தின் படி யாவரேனும் நடப்பதுண்டா? இல்லை .