பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

65



பிராமணரையே தொழுது கொண்டு வருகின்றார்களா? அதுவுமில்லை . பிராமணர்கள் செம்படவர்களுடன் ஒர் மரத்தடியில் லேனும் வாசஞ்செய்யப்படாதென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் செம்படவர்களுக்கு அருகே வாசஞ்செய்யாம லிருக்கின்றார்களோ? அதுவுமில்லை. சூத்திரன் அருகிலிருக்கும்போது வேதத்தை போதிக் கலாகாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அது போல் சூத்திரர்கள் அருகே வேதத்தைப் போதிக்காமலிருக்கின்றார் களோ? அதுவுமில்லை. பிராமணனுக்கு சர்மாவென்றும், க்ஷத்திரியனுக்கு வர்மாவென்றும், வைசியனுக்கு பூதியென்றும் அவரவர்கள் பெயர்களினீற்றில் இத்தொடர்மொழிகளை சேர்த்து வழங்கி வரவேண்டுமென்று ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அவ்வகை யேனும் பெரும்பாலும் வழங்கி வருகின்றனரோ? அது வுமில்லை. பிராமணனுக்கு பருத்தி நூலும், க்ஷத்திரியனுக்கு சணப்ப நூலும், வைசியனுக்கு வெள்ளாட்டு மயிரினால் திரித்த நூலும் அணிந்துக்கொள்ள வேண்டுமென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் க்ஷத்திரியர்கள் சணப்பநூலையும், வைசியர்கள் வெள்ளாட்டு மயிரையும் பூணூலாகவணிவு துண்டோ ? அதுவுமில்லை . மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம் 11-வது வசனம். 87 வசனங்களில் பரமாத்துமா பிரம்மாவை சிருஷ்டித்தார். பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணரை சிருஷ்டித்தாரென்றும் வரைந்திருக்கின்றார்கள். பிர் மா முகத்திற் பிறந்தபடியால் பிராமணரென்று சொல்ல ஆதார மிருந்தபோதினும், தற்கால பிறப்பு மாறுபட் டுள்ள துமன்றி, பிராமணத்தி பிறந்த வழியே தெரியாததினால், மநுசாஸ்திரத்தின்படி யதார்த்த பிராமணன் இல்லை யென்றே விளங்குகின்றதல்லவா? ஆம். தொழிற் பெயர் செயற்பெயர் யாவையும் ஜாதிகளாக ஏற்படுத்தி அதற்காதரவாக மதுசாஸ்திரமென்பதை நூதனமாக