பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

க. அயோத்திதாஸப் பண்டிதர்



வேற்படுத்தி வகுத்துள்ளக்கட்டளைபடிக்கு, செயலுந் தொழிலும் பொருந்தாம லகன்றுள்ளது கொண்டு, அவ்வாதரவாலும் யதார்த்த பிராமணரில்லை என்பது துணிபு. விவேகமிகுதியாலும், ஞான மகத்துவத்தினாலும் புத்த பிரானை "ஆதிகாலத் தந்தணரென்று " காவியங்களிற் கூறியுள்ள வாறு, விவேக மிகுதியும், அன்பின் மிகுதியும், சாந்த மிகுதியும் முற்று, சர்வ மக்களையுந் தன்னுயிர்போல் காத்து அரஹத்துக் களென்றும், பிராமணர்களென்றும் அந்தணர்க ளென்றும் பெயர்பெற்ற மகாஞானிகளாகும் மேன் மக்கள் ஒருவரேனு மிவ்விந்து தேசத்திலில்லையென்பது திண்ணம் திண்ணமேயாம். இவ்விடம் யாதார்த்த பிராமணரையும், வேஷப் பிராமணரையும், விசாரித்துணருங் காரணம் யாதென்பீரேல்:சகல ஜாதியோரிலுந் தங்களை உயர்ந்த ஜாதி பிராமணர் களென்று ஏற்படுத்திக்கொண்டு இத்தேச பூர்வ பவுத்த குடிகளை முன்னேறவிடாமல் புறங்கூறி பலவகைத் துன்பங்களைச் செய்து பதிகுவைத்ததுமன்றி, இவ்விடம் நூதனமாகக் குடியேறுகிறவர் களுக்கும் போதித்து அவர்களாலுமிழிவடையச் செய்கிற படியால் வேஷப் பிராமணர் எவ்வகையால் உயர்ந்த ஜாதிகளா யினரென்றும் பவுத்தர்கள் எவ்வகையால் தாழ்ந்தவர்களாயின ரென்றும் விளக்கு வதற்கேயாம். தங்களுக்குத் தாங்களே பிராமணரென்று சொல்லித் திரிவோர்களை விசாரித்தோம். இனியவர்களின் வேதோற் பவங்களையும், அதன் பலன்களையும் விசாரிப்போமாக. நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்ததாகக் கூறியிருக் கின்றது. மநுதர்ம சாஸ்திரம் முதலத்தியாயம் 23-வது வசனம். பிரம்மா அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இம்மூவர்களிடத்தினின்று வெளிப்படுத்தியதாகக் கூறியிருக் கின்றது. மற்றோரிடத்தில் நாயின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும், கழுதையின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும் மனிதர்கள் பிறந்து வேதங்களை எழுதியதாக வரைந்திருக்கின்றது.