பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

67



இருக்குவேதம் 2.3,3,4-வது வாக்கியங்கள். வேதங்களை சில ரிஷிகளும், சில அரசர்களும் எழுதிய தாகக் குறிப்பிட்டி ருக்கிறது. இந்நான்கு வகை வேதோற்பவத்தில் எவை மெய்யென் றும், எவை பொய்யென்று மேற்பது? இத்தகைய வேதங்களை வாசிப்பதால் மநுக்கள் சீரடை வார்களா? சீர்கெடுவார்களா? வென்பதை யாலோசிப் போமாக, யசுர்வேதம் 117-வது வசனம் அதர்வணவேதம் 160-வது வசனம் எக்கிய மாகிய நெருப்பிற் சுட்டுத் தின்பதற்கு ஆயிரம் பசுக்களை தாநஞ் செய்யவேண்டுமென்றும், தனக்கு சத்துருவாக யார் தோன்றுகிறார்களோ அவர்கள் யாவரையும் அழிப்பதற்கு குசப்புல்லுக்கு மந்திரஞ் சொல்லப்பட்டிருக்கிறது. இஃது அன்னியர்களையும், அன்னிய சீவப் பிராணிகளை யும் இம்சை செய்யலாமென்னுங் கொலைப்பாதக சீர்கேட்டின் முதற்படியேயாம். இருக்குவேதம் 20-வது வசனம். வசிஷ்டர் வருணன் வீட்டில் தானியத் திருடுவதற்குப் போனதினால் அவ்விடமிருந்த நாய் கடிக்க வரவும் அதைத் தூங்கும்படி மந்திரஞ் செய்திருக்கின்றார். இஃது அன்னியன் பொருளை அஞ்சாமற்றிரு.லா மென்னும் சீர்கேட்டின் இரண்டாம் படியேயாம். இருக்குவேதம் 24-வது வசனம். இயனென்பவன் தன் புத்திரி யமுனாவென்பவளை கற்பழிக்க வெத்தனித்தபோது அவள் மதி கூறல். யஜுர்வேதம் 95-வது வசனம். முதல் மநு தன் புத்திரியை மணந்திருக்கின்றான். இவை அன்னியர் தாரங்களையும், முறைமையை மீறியும்