பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

க. அயோத்திதாஸப் பண்டிதர்



ஆனந்தமாக யிச்சிக்கலாமென்னும் சீர்கேட்டின் மூன்றாம் படி யேயாம். யசுர்வேதம் 72-வது வசனம் இருக்குவேதம் 5-வது வசனம் இதர மனிதர்களும், விரங்கர் என்னும் அரசனுடைய ஐந்து பிள்ளைகளும் வேதத்தின் கிரந்தகர்தர்களாயிருந்ததாய் குறிப்பிட்டிருக்கின்றது. அதே யசுர்வேதம் 112-வது வசனத்தில் இவ்வேதமெழுதியவர்களில் நரமநுஷியராகிய கிரந்தகர்த்தாக்களில்லையென்று கூறியிருக் கின்றது. இஃது கண்ணைக் கேட்டால் மூக்கைக் காட்டுவதும், காதைக் கேட்டால் வாயைக் காட்டுவது மாகி, சகலமுந் தேகந்தானே யென்பது போல சமயத்திற்குத் தக்க மாறு கோட்களால் வேறுபட பேசற்கு பொய்யாம் சீர்கேட்டின் நான்காம்படியேயாம். யஜுர்வேதம் 111-வது வசனம். சோமபானஞ் சுராபானமென்னும் மயக்க வஸ்துக்களை யுண்டுசெய்யும் பாகங்களையும் அதை யுட்கொள்ளும் பாகங்க ளையுங் கூறுகின்றது. இஃது மனிதன் சுய புத்தியிலிருக்குங் காலத்திலேயே அனந்த கேட்டுக்குள்ளாகி அவத்தைப்படுகின்றான். அவ்வகை யவத்தையுள்ளோன் தன்னை மயக்கத்தக்க மதுபானங்களை யருந்தி இன்னும் மயங்குங்கோளென்னும் சீர்கேட்டின் ஐந்தாம் படி யேயாம். இத்தகைய கொலை களவு முதலிய பஞ்சபாதகங்களை தினே தினே செய்யினும் பாதகமில்லையாகும். வேதத்தின் நீதி போதத்தை விசாரித்தோம். இனி யிவ்வேதம் யாவரால் எக்காலத்தில் எவ்விடத்தில் தோன்றியதென்பதையும் விசாரிப் போமாக. இருக்கு, எஜூர், சாமம், அதர்வணம் என்னுமின்னான்கு வேதங்களைச் சங்கராச்சாரியேனும் பூர்த்தியாக வைத்திருந்து, இன்ன கண் காட்சி சபையில் சேர்த்திருந்தாரென்னும் ஓர் சரித்திராதாரங் கிடையாது.