பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

69



இந்நான்கு வேதங்களையும் இராமாநுஜாச்சாரியேனும் பூர்த்தியாக வைத்திருந்து, இன்ன கண்காட்சி சபையில் சேர்த்திருந்தாரென்னும் ஓர் சரித்திராதாரங் கிடையாது. மாத்வாச்சாரியே னு மிவ்வேதங்கள் முழுவதும் வைத்திருந்து இன்ன மடத்திற் கிடைத்ததென்றேனும் ஒர் சரித்திரதாரமுங் கிடையாது. இந்நான்கு வேதமும் இன்னின்ன வம் மிஷ வரிசை யோரால் இன்னின்ன மடங்களில் இருந்துள்ளதாகு மென்று, செப்பேடுகளேனுஞ் சிலாசாசனங்களேனும் ஏதொன்றுங் கிடையாது. மற்றும், எவ்வகையால், யாவரால், எப்பாஷை யில் வெளிவந்ததென்பீரேல்:- பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இத்தேசத்தில் வந்து குடியேறிய சில காலங்களுக்குப் பின், சகல ஜாதியோருக்கும் நாங்களே பெரிய ஜாதிகளென்று சொல்லித் திரியுஞ் சில வேஷப்பிராமணர்களை, சில ஐரோப்பியர்கள் தருவித்து உங்களுக்கு வேதமுண்டா . அவற்றைப் பார்க்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள். அதினால் தற்காலமுள்ள வேதத்தின் அரைபாகத்தை அக்கினியைத் தெய்வமாகத்தொழும் பாரீசு ஜாதியோருள் ஒருவராகிய தாராஷ்கோ வென்பவர் பாரீசு பாஷையில் கொண்டுவந்து கொடுத்திருக்கின்றார். இப்பாரீசு ஜாதியாரால் பாரீசு பாஷையில் தற்காலமுள்ள வேதத்தின் பாதிபாகம் முதலாவது வெளிவந்து கல்கத்தா கண்காட்சி சாலையில் வைக்கப்பட்டது. இவ்வேதங்களிலுள்ளப் பெரும் பாகங்களையும் பாரீசு ஜாதியார் வேதமாகும் ஜின்டவிஸ்டாவென்னும் நூலிலுள்ள வைகளையும், ஒத்திட்டுப் பார்ப்போமாயின், இவர்கள் அக்கினியின் தொழுகைகளும் மந்திரங்களும் பிரமாணங்களும் பொருந்தக் காணலாம். பாரீசு ஜாதியார் என்னும் சொராஷ்டர் தர்ராஷ்கோ வென்பவரால் வந்த பாதி வேதக் கதைகளுடன் பவுத்த தருமச் சரித்திரங்களிற் சிலதையும் நீதிநெறி ஒழுக்கங்களிற் சிலதையும் 5