பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

71



களேனும் மார்க்கங்களேனும், மதங்களேனும் முழு உருவுடன் இருந்த தென்னுஞ் சரித்திரங்களுஞ் சிலாசாசனங்களும் கிடையாது. கிறிஸ்து பிறந்து எழுநூறு வருஷங்களுக்குப் பின்பு பிராமண மதந்தோன்றியுள்ள தென்றும் அதன் பின் திரிமூர்த்தி மதங்களாகும் விஷ்ணு மதம் சிவ மதங்கள் தோன்றியதென்னுஞ் சரித்திரதாரங்களுமுண்டு. அம்மதங்கள் புத்த மார்க்க சரித்திரங் களையுந் தன்மங்களையும் ஆதாரமாகக்கொண்டே தோன்றிய தென்னும் பாகுபாடுகளுமுண்டு. இவ்வேஷ பிராமணர்கள் புத்தர் காலத்திலேயே இருந்ததாக, பிரமஜாவ, சூத்திர முதலிய பவுத்த நூற்கள் கூறுகிற தென்று நடிப்பார்கள். அது விசாரணையற்ற நடிப்பேயாகும். ஏனெனில் புத்தருக்கு பிறகு அவர் நூற்களில் பல ஒவ்வாத, அவர் கூறத்துணியாத, அவர் செய்யாத விஷயங்களும் நுழைந்திருக்கின்றன. அதோடல்லாமல், இந்துக்களும் பல கதைகளெழுதி எங்கள் மதத்தில், எங்கள் சாமி புத்தராக அவதாரஞ் செய்தார், அந்த தர்மம் எங்கள் இந்து மதத்திலிருந்து வந்தது, எங்கள் மதத்திற்கு முந்தி வேறு மதங்கள் கிடையாது. இந்தியாவில் எந்த மதம் எப்போது உண்டானாலும் அது எங்கள் இந்து வேதத்திலிருந்து வந்ததேயாகும். என்று எப்படி எழுதி மெய்ப்படுத்திவிட்டார்களோ! அப்படிப் போலவே இப்பார்ப் பார்கள் பரதேசிகளாகையால், தாங்கள் இந்திரர் தேசத்திற்கு சுதந்திரமுடையவர்கள், எங்களில் சிலர் பவுத்த ரானார்கள் பூர்வ பிராமணர்கள்தான் என்று தங்களையும் தங்கள் மதத்தையும், புத்தருக்கு முற்படுத்திக் கொள்கின்றார் களன்றி வேறில்லை. புத்தருக்கு முந்தி இந்து மதமென்ற பெயரோடு ஒரு பிராமண மதமாவது ஒரு திரிமூர்த்தி மதமாவது இந்தியாவில் இருந்தது கிடையாது. எல்லா பக்கங்களிலும் முறையும், மறையும், நெறியும், தானமும், ஞானமுமற்ற காட்டு மிராண்டிகளே இருந்தார்கள். இதனால்தான் பகவன் புத்தர், கொல்லாமை, கள்ளாமை, விபசாரஞ் செய்யாமை, பொய்யாமை, மதுவருந் தாமை முதலிய சீலங்களைக் கொடுத்து ரக்ஷித்தார். இதல்லாமல், "இருள் பரந்து கிடந்த மலர் கலியுகத்தில் விரிகதிர் செல்வன் தோன்றின னன்ன என்றும் தெரிவிக்கின்றமையால் இந்து