பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

க. அயோத்திதாஸப் பண்டிதர்



மதத்திலிருந்து புத்தர் பிறந்தார் என்ற உறுதி கிடையாது. அப்படி அவர் பிறந்திருந்தால் தனது மதத்தைவிட்டு வேறொரு புது மார்க்கத்தை ஏன் போதிக்கின்றார்? அக்காலத்தில் இந்த இந்து மதமிருந்தால் இந்த மதத்தைப் பற்றி ஏன் அவர் கண்டிக்க வில்லை? அல்லது இந்து மதத்தானென்றாவது , பிராமண மதத்தானென்றாவது, அவர் தன்னைக் காட்டிக்கொள்ளா காரணமென்ன? க்ஷத்திரிய ஒழுக்கத்தைப் பின்பற்றி பிராமணனை வந்தனை வழிபாடுகள் புரிந்து, தன் தேயத்தை பிராமண மத ராஜ்யமாக்காமல் தன்னைத் தான் தெரிந்து, சர்வ பந்தமற்று ஜாதி மதம் என்ற பேதா பேதங்களற்று சுய சமதர்ம போதகராக ஏன் விளங்கினார்? சிந்தித்துப்பாருங்கள், பகவான் லோகதர்மமான (புத்த தர்மம் இருந்த காலத்தில் உண்டான பிராமண மதம் பவுத்தர்களையும் அவர்கள் தெய்வம் நூல் முதலியவைகளையும் பெரிய கேடு செய்திருப்பது யாவருக்குந் தெரியும்) உண்மையை அறியுங்கள். பின்னும் திருவள்ளுவநாயனாரின் காலத்திலேயே இவ்வேஷப்பிராமணர்க ளிருந்தார்களென்று கூறுவதற்கு கபிலரகவலென்னும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்தியிருக்கின் றார்கள். அஃது தோன்றிய வந்தரங்க மறியாதோர் அதனை மெய் சரித்திரமென்றும் படித்து வருகின்றார்கள். இவ்வகவல் தோன்றிய காரணம் யாதென்பீரேல், வேஷப் பிராமணர்களும் பறையர்களும் பூர்வகாலத்திலிருந்தவர் களென்று. தங்கட் பொய்யைப் பலப்படுத்துவதற்கேயாம். சீனதேச பவுத்தர்களும் சிங்களதேச பவுத்தர்களும், பிரமதேச பவுத்தர்களும், இந்திர தேசம் வந்து இவ்விடமுள்ளவர்களிடம் புத்தரது சரித்திரங் களையும், அவர் தருமங்களையுங் கேட்டு எழுதிக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. அக்காலங்களி லிவ்விடங் குடி யேறி பவுத்த தருமங்களைப் பாழ்படுத்தி வேஷப் பிரமணத்தை விருத்தி செய்து வந்தக் கூட்டத்தார் சகட பாஷையிலிருந்த புத்ததன் மங்களுடன் புத்தபிரான் சில பிராமணர்கள் கோட் பாடுகளைக் கண்டித்து அவர்களை புத்ததர்மத்தில் சேர்த்துவிட்டது போல் எழுதி யனுப்பிவிட்டிருக்கின்றார்கள். அவ்வகையால் தங்களைத் தாழ்த்தி புத்தரை உயர்த்தி எழுதிக்கொடுக்கவேண்டியக் காரணம் யாதென்பீரேல்,