பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

73



அவர்களைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் பெரிதல்ல. இப் பிராமணரென்று சொல்லித்திரியும்படியான கூட்டத்தார் புத்தர்காலத்திலேயே இருந்தார்களென்னும் ஒர் ஆதாரம் நிலைத்துவிடு மாயின் அதைக்கொண்டே தங்களை யித்தேசப் பூர்வக் குடிகளென விளக்குவதற்கேயாம். ஆரியராகிய பார்ப்பார், புத்தருக்கு முந்தி குறிப்பான பிராமணர்களாக இருக்வில்லை. இக்கால வள்ளுவர்களைப்போன்ற காட்டு மனிதர்களை மிக புத்திமான்களென மதித்து வந்தார்கள். அம்மூடர்களால் எழுதிய விஷயங்களே இக்காலம் நூல்களில் காணக்கிடக்கின்றன. ஆதிகாலந்தொட்டு பறையறுண் டென்பது போன்று இதுவுமோர் பொய்யேயாகும். சிலர், உபநிடதங்களை வாசித்து புத்தர் தெளிந்திருக் கின்றாரென்று மாக்ஸ் முல்லர் கூறுகின்றாரே அதினால் இப்பிராமண மதம் முன்பே யிருந்ததல்லவா வென்பாருமுண்டு. இவ்வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உரியவர் களாகிய வேஷப்பிராமணர்களறியாமல், மாக்ஸ் முல்லர் சொல்லுகிறார். நானுமவற்றைச் சொல்லுகிறேனென்பது, ஏனவாயன் கதையேயாகும். மாக்ஸ் முல்லர் அவர்களோ புத்தர்கால பாஷையையும், அவர் வகுத்துரைத்த மார்க்கத்தையும், அவரால் திருத்தஞ் செய்துள்ள பாஷைகளையும், பவுத்த சங்கத்தோர் உபநிடதங் களையும், அதனதன் காலவரைகளையுஞ் சீர்தூக்கிப் பாராமலும் தன்னிடங் கிடைத்துள்ள உபநிடதம் முந்தியதா, புத்ததர்மம் முந்தியதாவென்றுணராமலும் ஆதாரமற்ற அபிப்பிராய மளித்திருக்கின்றார். அவர் ஒருவர் அபிப்பிராயத்தைக் கொண்டு சரித்திரங்களையுஞ் செப்பேடுகளையுஞ் சிலாசாசனங்களையும் அவமதிக்கப்போமோ ஒருகாலுமாகா. புத்த பிரானுக்கு முன்பு வேதங்களிருந்த தென் பதும், உப நிஷத்துக்களிருந்ததென்பதும் இந்திரர்தேசப் பூர்வ விசாரணையற்ற பொது அபிப்பிராய மாவதோடு அஸ்தி பாரமற்றக் கட்டிடமுமாகும். இந்நான்கு வேதங்களும் திரண்டு புத்தக ரூ பமாய் வெளிவருவதற்குக் காரணம் யாவரென்றும் எப்பாஷை