பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

க. அயோத்திதாஸப் பண்டிதர்



யிலிருந்து யாவரால் கொடுக்கப்பட்டதென்றும் எக்காலத்தில் தோன்றியதென்றும் அறிந்தோம். கடவுள் இனியொருவன் அதை வாசிப்பதினாலும் அதைக் கேட்பதினாலும் யாது பயனடைந்து ஈடேறு வானென்பதையும் விசாரிப்போமாக. இருக்கு வேதம் 13-ம் பக்கத்தில் அக்கினி, வாயு, சூரியனென்ன மூன்று கடவுளர்கள் உண்டென்று கூறி, அவற் றுள் யதார்த்தமாக ஒரே கடவுளாகிய மகாத்மா உண்டென்றும், அம்மகாத்மாவே சூரியனென்றுங் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இத்தகைய வேதத்தை ஒரு கடவுள் பிர மாவுக்குப் போதித்து, பிரமா முனிவர்களுக்குப் போதித்து அவர்கள் தங்கள் சிஷியர்களுக்குப் போதித்ததாகக் கூறி அதே கடவுள் வேதங்களிலுள்ள சில பாகங்களை நேரில் முனிவருக்கே போதித்திருப்பதாகவே பாயிரத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. இதைப் பின்பற்றிய வொருவன் கடவுளென்னும் வார்த்தையை நம்புகிறதா? பிரமாவை நம்புகிறதா? முநிவர்களை நம்புகிறதா? அக்கினியை நம்புகிறதா? வாயுவை நம்புகிறதா? சூரியனை நம்புகிறதா? சூரியனே மறு பெயர் கொண்ட மகாத்மாவை நம்புகிறதா? அன்றேல் அச்சூரியனைக் காலம் பார்த்து விழுங்கும் இராகுவென்னும் பாம்பை நம்புகிறதா வென்னும் விவரம் யாதும் விளங்கவில்லை. இவற்றை யாரொருவர் நம்பி இன்ன சுகமடைந்துள்ளாரென்னும் ஆதாரமும் விளங்கவில்லை. பிரமம் இத்தியாதி கடவுளர்களும் நீங்கலாக, யஜுர் வேதம் 120-வது பாகத்தில் பிரமத்தைத் தெளிவிக்க வேண்டுமென்று, புத்திரன் பிதாவைக் கேட்கின்றான். அதற்குப் பிதா சருவமும் பிரமமென்றார். 121-வது பாகத்தில் புசிக்கும் புசிப்பு அல்லது தேகமே பிரமமென்றார். 122-வது பாகத்தில் உயிர்ப்பாகிய பிராணனே பிர மமென்றார்.