பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

க. அயோத்திதாஸப் பண்டிதர்



சர்வக்யானனும், பிரம புறமெங்கும் பரவி மகிமையுள்ளவனு மாகிய ஆத்மா ஆகாசத்திலிருக்கின்றானென்றும் குறித்திருக் கின்றது. சுவேதாசுவத உபநிஷத்து முதலத்தியாயம் மூன்றாம் வாக்கியத்தில் தியானத்தையும் யோகத்தையும் அனுசரித்தவர்கள் காலாத்துமாக்களோடமைந்த வேதாத்தும் சக்தியைக் கண்டார் களென்று குறித்திருக்கின்றது. அதே அத்தியாயம் 13-வது வாக்கியத்தில் புருஷன் அந்தராத்து மாவாகி விரலளவுடைய ஜனங்களின் இருதயத்தி லிருக்கின்றானென்று குறித்திருக்கின்றது. இவ்வகையுள்ள மற்றும் உபநிடதங்களை வரைய வேண்டுமானால் வீணேவாக்கியங்கள் வளருவதுமன்றி ஈதோர் பயித்தியக்காரன் பாட்டுகளென்றும் பரிகசிப்பார்கள். விசாரணைப் புருஷர்களே! வேஷப்பிராமணர்கள் வேதங்களிற் கூறியுள்ள பிரம விவரமும் ஆத்தும் விவரமும் நிலையற்றிருப்பது போலவே, இவ்வேத அந்தமாகும் உப நிஷத்துக்கள் யாவும் ஒன்றுக்கொன்று அப்பிரமத்தின் நிலையையும், ஆத்தும நிலையையும் ஆதாரமின்றி கூறி பிள்ளைகள் விளையாட்டில் கண்ணைக் கட்டியடிக்க ஆள் தெரியாது தடவி அவ்விடம் உள்ளவர்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லித் திரிவது போல் வேத அந்தங்களை வாசித்தும் விழலுக்கிரைத்த நீராய் விருதாவடைகின்றன. வேதத்திலுள்ள பொருளும் வேத அந்தத்திலுள்ள பொருளும் இன்னதென்று விளங்காதிருக்க சருவமும் விளங்கியவர்கள் போல் நடித்து வேதாந்த குருக்களென வெளி தோன்றியும் தருக்க சாஸ்திரம் பெருக்கக் கற்றுள்ளோம், நீங்களுமவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் பிரமத்தின் பின்னும் முன்னும் எமக்குத் தெரியாது! ஆத்து மத்தின் அடி யுமுடியும் எமக்குத் தெரியாது! நான் சொல்லுவதைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இன்னும் வருந்திக் கேட்பீர்களானால் பிரமம் எங்கும் நிறைந்திருக்கின்றது, ஆனால் பறையனிடத்தில் மட்டுமில்லையென்பது போல் அவனை தூரம் வைத்துப் பாடஞ் சொல்ல வேண்டியதென்பர்.