பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

79



இத்தகைய வேஷ பிராமணர்கள் வேதாந்தத்தைப்பின் பற்றிய வேஷ வேதாந்திகளை விடுத்து, கண்டதைக் கண்ட வாறும் 2.ள்ளதை உள்ளபடி யு முரைக்கு மேன் மக்களைப் பின்பற்ற வேண்டுகின்றோம். “சாதி குலம் பிறப் பிறப்பு பந்தி முந்தி யருவுருவத் தன்மை நாமம்” ஆம், துவிதமற்ற அத்துவித விசாரணைப் புருஷரை நாடுங்கள். அவரன்பிலும் பற்றற்றச் செயலிலுங் கூடு ங்கள். விவேகிளா லோதியுள்ளக் கலை நூல்களைத் தேடுங்கள் சகல மக்களும் விருத்தி பெறக் கூடிய நீதிபோதங்களைப் பாடுங்கள். ஏனென்பீரேல், உலகத்தில் தோன்றியுள்ள மக்களுள் ஒரு விவேகமிகுத்தோன் தோன்றுவானாயின் உலகம் சீர்பெறுவது மன்றி மக்களும் அசத்திய தன் மங் களை விலக்கி சத்திய தன் மத்தைக் கைக்கொள்ளுவதால் சகல சுகமும் வாய்க்கு மென்பது சத்தியம். யாங்கள் வேஷப் பிராமணர்களுமன்று வேஷ வேதாந் திகளுமன்றென வெளிவருவார்களாயின் மற்றுமுள்ள வேஷம் வேதாந்தக் கற்பனா கதைகளைக்கொண்டு முற்றும் விளக்கக் காத்திருக்கின்றோம். தெளிதல் உலக மடங்களிலும் உள்ள மத ஆசிரியர்கள் தங்கள் மத ஸ்தாபனங்களைத் தங்களால் கூடியமட்டும் நுட்ப திட்பமாகவே சொல்லிவைத்திருக்கின்றார்கள். அந்நூற்களைச் சாமானிய மனிதர்கள் படித்தோ, கேட்டோ விட்டால் உடனே அவர்களைப் பின்பற்ற தடையொன்றுமிராது. ஏனெனில் முற்கால மனிதர்கள் தங்கள் மூளையைச் செலவிட்டு எழுதிய பொய்க்கதைகள், இக்கால மக்களுடைய மூளையைத் தகனம் பண்ணுகின்றது. அதனால் அறிவு சாம்பலாகின்றது. ஆராய்ச்சி என்னும் பவுத்தத்திற்கு தடையுண்டாக்குகின்றது. சுய சம தர்ம பாட்டைக்கு முள்ளிட்டு அடைக்கின்றது. தேச தெய்வமென்னும் விளக்கை அணைத்து விடு கின்றது. கல்வி, கைத்தொழில், மருத்துவம் முதலிய அபிவிர்த்தியை வேரோடு பிடுங்கி எறிகின்றது. இது பிரத்தியக்ஷம்.