பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

81



எளிய குடும்பங்கள் சீர்திருத்தமும் செல்வச் செருக்கு மடையப் போகின்றது? அதொன்றும் முடியாது. இப்படியிருக்க, மெய்யான பார்ப்பான் இருக்கிறான், பொய்யான பார்ப்பான் இருக்கிறான் என்று சொல்வோமே யாமாயின் அவ்விருவகைப் பார்ப்பார்களும் தற்காலமுள்ள பிராமணர் கூட்டத்தில் தானிருக்கின்றார்கள். அக்கூட்டத்தில் ஒருவனை ஏற்றும் மற்றொரு வனைத் தூற்றியும் வருகின்றோம் என்றதாயிற்று. ஆனாலும் நம்மவர்கள் பிராமணம் என்றால் என்ன? அதின் உற்பவம் எது? நமக்கு பிராமணம் என்னத்திற்கு? ஆடும் பைத்தியர்கள் பிராமணத்தைப் பூஜிக்கும் காரணம் என்ன? பிராமணன் முகத்தில் யோனி இருக்குமா? முகத்தில் பிறந்தவன் பிரமாவாகுவானா? பிராமணன் (பிரமா) விந்துக்குப் பிறந்த வனுக்கு என்ன பெயர் வழங்கல் வேண்டும்? என்ற ஆராய்ச் சியில் இறங்கினோமில்லை. எவனாவது நான் பிராமணனென்றால், பிராமண பீஜாய நம என்று கும்பிடு போடத்தான் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இங்ஙனம் நாம் கும்பிட்டெழ நமக்கு நமது தேசத்தில் பிராமணன் தேவை என்றால் அது எந்த நீதி ஸ்லத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்? ஒரு தாய்க்குப் பிறந்த நான்கு குமாரர்களில் மூத்தவனுக்கு, சர்வ சுதந்தரமுண்டு. அவனை நாடோறும் மற்ற மூன்று சகோதரர்களும் கும்பிட்டு வழிபடவேண்டும். மூவர் சம்பாத் தியங்களையும் மூத்தவன் ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்று இந்த அகில உலகத்தில் எந்த மதத்திலாவது, ஜாதியிலாவது, தேசத்திலாவது, நீதிமன்றத்திலாவது புத்திமான்கள் ஒப்புக் கொள்வார்களா? இல்லை இளையவன் உஜ்ஜீவிக்க மூத்தவன் அன்னாகாரம் உட்கொள்ள வேண்டுமென்று நாம் சொன்னால், இதைக்கேட்டு சிரிக்காதவர்கள் உலகத்தில் யாராவது இருப்பார்களா? அப்படி யிருந்தால் அவர்களை நாம் மிருகத்துடன் சேர்க்க மாட்டோமா? யோசித்துப் பாருங்கள். இக்காலத்தில் நமக்கு வேண்டுவது நல்ல அறிவு, நல்ல கைத்தொழில், நல்ல நாகரீகம், நல்ல நடக்கை, நல்ல சகோதரத்துவம், நல்ல கல்வி, நல்ல ஜீவனம் முதலியவை களேயாகும். இவைகளை விடுத்து மனிதரில் பிராமணன் இருக்கின்றான் என்றால், அவனுக்கிருப்பது, உடல்