பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

93



மாகா. ஆமெனில் அது புராண மூடம் என்னப்படும். விவேகிகள் ஏற்கார்.

இது கார்வெட்டி, அரசனாகிய கிரீட்டன் கால சரித்திர மாகும். அக்காலத்தில் இக்கரபோலீஸன் உத்சவங் கொண்டாடி வந்தவர்கள் வள்ளுவர்களே! அவர்கள் இக்காலத் திலும் இந்து மதத்தில் முற்றும் சேர்ந்தவர்களாகத் தோன்ற வில்லை. தாதப்பறையர் என்பது போலவே, வள்ளுவப் பறையர் என்றும் குறிக்கப்படுகின்றது. இவர்கள் இந்துக்களுடனும், பறையர் களுடனும் சேராமல் தனித்திருக்கின்றார்கள். வள்ளுவர்களுக்கு நாயனார் என்றும் சொல்லப்படும். இத்தகைய நாயனார் பரம்பரையில் ஒருவர் மடங்கட்டி சயன சிலை தாபித்து, கரபோலீஸன் உத்சவங் கொண்டாடினார் என்றால், அவ்வுத்சவம் அக்காலத்தில் எவ்வகையாக நடந்த தென்று புலனாகவில்லை. அம்மடத்திற்கு வள்ளுவர்களே உரிமை யாளர்களாவார்கள். அவ்வள்ளுவ வம்சத்தில் வந்த, கணிதாதி யும் ஸாஸ்திர பண்டிதருமான மார்க்கலிங்க நாயனார் அவர்க ளெழுதிய சுத்த ஞானம் என்ற நூலாலும், திரு மயிலை வீ. குப்புலிங்க நாயனார் அவர்களியற்றிய ஞானம் என்ற நூலாலும் இது சாக்கையர்கள் மடமென்றும் பூம்பாவை அரவங் கடித்திறந்தாள் என்றும் சுத்தமாக விளங்குகின்றது. ஆனால், இக்காலத்தில் அத்திரு மயிலாபுரி மடம் ஜாதி சைவர்கள் கைவசத்தில் சிக்கு பட்டுள்ளது. வள்ளுவர்கள் ஒடுக்கப்பட்டவர்களில் சேர்ந்துள்ளதால் தங்கள் உரிமையைக் கேழ்க்கும் அதிகார மற்றவர்களானார்கள். சாக்கையர்களை இன்ன மதத்தினரென்று குறிப்பிட முடியாம லிருக்கின்றது. எப்படி யும் புற சமயிகளென்றே கூறலாம். இவர்கள் கூறும் கரபோலீஸன் சரித்திரம் மேற்குறித்த பஞ்சரத்ந பாவில் விளங்குகின்றன. ஆனால் கபாலீஸன் கோவில் என்றே இக்காலம் சொல்லப்படுகின்றது. சாக்கையர்களாகிய வள்ளுவர்கள் பெரும்பாலும் சோம்பேறி ஜீவனக்காரர் களாகவும், நேர்முகமாக ஜோஷிய பொய்போதகர்களாகவும் அறியாமையில் ஆழ்ந்தவர்களாகவும், மக்களை ஏமாற்றுகிறவர் களாகவும், வாழ்ந்து வருகின்றார்கள். இதனாலேயே இவர்கள் நூலாதாரத்தில் சங்கைகள் ஏற்படுகின்றன.