பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 க. அயோத்திதாஸப் பண்டிதர் சித்தார்த்தனது ஞாபக தினங்களை இந்தியர்களென்போர் யாவரும் வழங்கி வரினும், பழமையான மூட பழக்க மத கோட்பாடுகளில் நுழைந்து அம்மத ஆபாசங்களை சித்தார்த்தனது நற்சரித்திரத்திற் சேர்த்து, பண்டிகை என்று வழங்குகின்றார்கள். இனி இரண்டாவது கபாலீஸன் கதையைக் கவனிக்கலாம். அத்தியாயம் - 2 கபால பாத்திர உற்பத்தியும், சிவன் கபாலமேந்திய விபரமும் சிவனுக்கு ஐந்து தலைகளிருந்தன. அதுபோலவே பிரமனுக்கும் ஐந்து தலைகளிருந்தன. சிவன் மனைவியாகிய பார்வதிக்கும். இவர்தான் சிவனென்றும், பிரமனென்றும் பல நாளாகத் தெரியாமலிருந்தது. பார்வதி ஒரு நாளிதை சிவனிட முரைக்கவே, பிரமனின் ஐந்து தலைகளில், ஒரு தலையை சிவன் கிள்ளி எடுத்துவிட்டார். அத்தலை சிவன் கையில் ஒட்டிக் கொண்டதோடு, அவரை பிரமன் முண்டத்துள் இழுத்துக் கொண்டு போனது, சிவன் தன்னுயிருக்குப் பயந்து பிரமனை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தன் கையில் ஒட்டிக் கொண்ட பிரமன் தலையைச் சிவனால் விலக்க முடியாமற் போனது. தலைக்கிள்ளிய குற்றத்திற்காக, சிவன் சாகுமட்டும் பிரமன் தலை அவர்கையில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டு மென்ற சாப தண்டனையைச் சிவன் பெற்றுக்கொண்டார். ஆதலால் சிவன் கையிலிருக்கும் பாத்திரத்திற்கு பிரம்ம கபாலம் என்று பெயர் வந்தது. கபாலம் மண்டையோடு. இது பார்வதிக்காகத் தலைக் கொய்யப்பட்ட கதையாகும். பிரமன் தன் புத்திரியைப் புணர்ந்த குற்றத்திற்காக தலையறுக்கப்பட்ட வேறொரு கதையுமுண்டு. அக்கதையிலும், பிரமன் தலை சிவன் கையில் ஒட்டிக்கொண்டது. கபாலீஸன் உத்சவத்திற்கு முன் காரணமாயிருப்பதுதான் சிவராத்திரி என்று சொல்லப்படும். இந்த சிவராத்திரி சம்பந்தமாக, சிவராத்திரி புராணம், சிவராத்திரி மான்மியம், சிவராத்திரி கர்ப்பம் என்று பல கதைகளுண்டாக்கப்பட்டுள் ளன. இந்த சிவராத்தியின் மகத்துவங்களை மற்ற புராணங்களி லும் கொஞ்சம் கொஞ்ா மாக வர்ணிக்கப்பட்டுள்ளது.