பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

95



இதல்லாமல் மகாராஜா துறவு, பெருந்துறவு என்றும் சில நூற்கள் வரைந்துள்ளன. இவ்வாறான புராணங்களின் கருத்துக்களே சிவராத்திரி பண்டிகையாகும். ராத்திரி முற்றும் கண்விழித்து சிவராத்திரி புராணம் படிப்பார்கள். அடுத்த நாள் ஸ்நாநஞ் செய்து புது வஸ்திரமணிந்து, சுடலைச்சென்று பிணவறையிலுள்ள கங்காளம் மண்டையோடு முதலியன வாரி , எடுத்தெறிந்து கொள்ளைக் கொள்ளை என்று கூவுவார்கள். இது மயானக் கொள்ளை எனப்படும். இவ்வாறு செய்வதல்லாமல் வேறொரு நற்காரியமும் இப் பண்டிகையில் நடைபெறாது. இதுவே சிவராத்திரியும் சுடலைக்கொள்ளையுமாகும். இன்னொரு கதை, காளியும் சிவனும் சுடலை மணத்தருகில் கூத்தாடினார்களாம், அப்போது நாராயணமூர்த்தி மத்தளம் அடித்தாராம், காளியும், சிவனும் சுடலைக் காவல் புரிகின்றார் களாம். சுடலையை ருத்திர பூமி என்பார். மற்றொரு கதை, சிவன், சுடலையில் வேகும் பிணத்தருகே இருப்பதால் சுடலை வாசி என்றும், மனிதர்களுடைய எலும்புகளை ஆபரணமாக பூண்டு கொண்டிருப்பதால் கங்காளனென்றும், மனிதர்களுடைய தலைகளை மாலையாக போட்டிருப்பதால் சிராமாலை யணிபவன் என்றும் அவருக்கு பெயருண்டு. இப்படியே காளிக்கும் பெயருண்டு. சிவன் இரந்துண்ண பாத்திரம் பெற்ற கதையை முன்னே உரைத்தோம். இனி ஒரு நாய், சிவராத்திரியின் பலனைப் பெற்ற மருத்துவத்தைச் சொல்கின்றோம். பிரமோத்தர காண்டம். சிவராத்திரி மகிமை. 10 முதல் 79 பாட்டு முடிய சுருக்கங்கள். சிவராத்திரி தினத்திலே, ஒரு நாய் பிரசாதத்தைத் திருடி யுண்ண, ஒரு சிவாலயத்துள் நுழைந்ததாம், கோவிலுள்ளி ருந்தோர் அதைக்கண்டு கல்லுந் தடி யுங் கொண்டு துரத்தியடித்து நாயைக் கொன்றுவிட்டார்களாம். சிவராத்திரி தினத்திலே தூரத்திலிருந்து நடந்து வந்து தீபாராதனையைக் கண்களினால் கண்டு, சிவன் கோவிலை வலமோடி,