பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

97



என்பது நிக்ஷயம் அல்லவா? வள்ளுவர்கள் தெய்வம் சைவர்கள் தொழ நேர்ந்தது பெரிய அவமானமே. நாமறிய, கிறிஸ்து மதமும், முஹமது மதமும் இந்தியாவில் எப்படி தனித்து வழங்குகின்றதோ! அப்படியே கொஞ்ச காலங்களுக்கு முன்னர், சங்கரர் மதம், மாத்துவர் மதம், இராமாநுஜர் மதம் என்று இந்தியாவில் தனித்திருந்தன. அம்மத கோட்பாடுகளில் நுழைந்தவர்களுக்கு உண்மை இன்னதென்று தெரியவில்லை. கடவுள் தயவால் பொய்ச் சொல்ல பயப்படுகிற தில்லை. ஆகையால் தான் சிவராத்திரி நம்பிக்கைப் பெருத்து நாய் இராஜாவாகிவிட்டதென்று கூறுகின்றார்கள். சிவராத்திரியில் கோயிலுக்குப் போகிறவர்களே! இது உண்மையா? இக்கதை நம்மை அவமதிக்கின்றதே! விடுதலையடையுங்கள். அல்லது சிவராத்திரியில் உயிர் துறந்த நாயைப்போல், கொலையுண்டு, சிவபதவியடைவீர்களோ! அன்றேல் மறுபிறப்பில் அரசர்களாக வருவீர்களோ! நிதானித்துப் பாருங்கள். சிவராத்திரி என்றால் சிவன் இறந்துவிட்ட இராத்திரியா? இல்லையேல் அடுத்த நாள் மயானத்தில் பலகாரம் முதலியன படைத்து மண்ணைக் கட்டிக்கொண்டு வெம்பி வெம்பி நினைத்தழுதல் ஏன்? இது மூடத்தனமல்லவா? இதனாலன்றோ . பட்டினத்துபிள்ளை பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைச் சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே யினிச்சாம பிணங்கள் கத்துங் கணக்கென்ன காண் கயிலாபுரி மாளத்தியே. என்று புத்தி சொன்னார். நாம், நாடு நகரம் யாவும் பார்ப்பாருக்கு ஒப்படைத்துவிட்டாலும், நமது அறிவையுமா, ஒப்படைத்துவிட்டோம்? சென்னை மயிலாப்பூரில், வள்ளுவர் களுடைய கபோலீசனை, சைவர்கள், எங்கள் சிவனென்று பொய் சத்தியஞ் செய்கின்றார்களே! அதை காதுகள் கேட்டும், கண்கள் பார்த்தும் மனம் பதைக்காத தென்னை? பார்ப்பனர் கொடுத் துள்ள நூலாதாரப்படி பிரமன் எப்போது பிறப்பவன். இவன் கையில், போல் இல்லை. இவனுக்கு விழாவும் கோயிலும் வணக்கமுங் கிடையாது. இவன் ஜாதியில் வைசியனாகும். நாராயணனுக்கு வருடத்திற்கு கொருமுறை பிரம உத்சவம்