பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 க. அயோத்திதாஸப் பண்டிதர் நடைபெறும். அச்சமயம் நாராயணன் கையில் வெள்ளி அல்லது பொன் போல் கொடுத்து, அவர் துறவியானதாக வணங்குவார் கள். இவர் கையில் எப்போதும் ஆயுதங்களே விளங்கும். இவர் ஜாதியில் அரசனாம். இவருக்கு காரணமின்றி பிக்ஷவேஷ விழா நடத்துவார்கள். சிவன் எப்போதும் இரப்பவராம். இவர் உலாவு வதும் இருப்பதும் சுடுகாடு, பர்வதக்குகையிலும் வசிப்பவர். இவர் ஜாதியில் பார்ப்பானாம். பிரமன் தலை தன் கையில் ஒட்டிக்கொள்ளு முன்னம், உள்ளங்கையில் இரந்துண்டவர். இவர் ஆயுதங்களைத் தரித்தவர். மயிலை கபோலீஸன் விழாவன்றி, வேறு எந்த சிவதலத்திலும் இவருக்கு பிச்சாண்டி வேஷ பெரிய விழா கொண்டாடுவது கிடையாது ஒருவன் பிச்சை யிரக்க மற்றவன் மண்டையோடுதானா வேண்டும்? சரி சிவன் கையிலிருக்கும் பாத்திரம் பிரமன் மண்டையோடுதான், பிரமன் தலை ஒட்டிக்கொள்ளு முன்னம் சிவன் எப்படி இரந்துண்டார்? வைணவர்கள் பிரம உத்சவம் கொண்டாடுகின்றார்களே! அந்த நாராயணன் கையிலுள்ள பாத்திரமும் பிரமனின் மண்டைத்தானா? இல்லையாயின் பிரம் உத்சவமென்று பெயர் வரக்காரணமென்னை? அல்லது பிரம்மமென்றால் இரந்துண்ணலா? இரப்பவர்க்கு பிரமமென்று பெயருண்டா? இரப்பவர்களெல்லாம் பிராமணர்களாக முற்காலத்திலிருந்ததைக்கொண்டு பெயர் வந்திருக்குமா? வாசகர்கள் சிந்திக்கவேண்டும். ஒரு மனிதனுடைய கையில், மற்றொருவனுடைய தலை ஒட்டிக்கொண்டதும், அத்தலை நாற்றமுண்டாகி மாம்சங்களெல்லாம் அழுகி புழுத்து, விழுந்து ஒட்டிலே உலர்ந்த பிறகு அதில் ஆகாரம் இரந்துண்டா னென்றால் அவரை விவேகிகள் ஏற்பரோ? இந்த கபோலீசன் கதையைக் கேட்டுங் கற்றறிந்த பெரியார்கள் கவனிக்காம லிருப்பது பெரும் பாவமும் அந்தகார விளைவிப்புமாகும். சகோதரர்கள் அன்னிய மத மூட பழக்க வழக்கக் கதைகளைக் கொண்டு இந்தியாவை இழிவு படுத்துதல் விவேகமாகாது. இவ்விதஞ்செய் நடைப்பிணங்களுக்கே,