பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

99



பட்டிணத்துப் பிள்ளையார் கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையா லெண்ணுண்டு சாத்த வெதிர்நிற்க வீச னிருக்கையிலே மண்ணுண்டு போகுதையோ கெடுவீரிந்த மானிடமே. என்றிதைக் கூறியுள்ளார் போலும், உண்மைக்குத்தார மாகக் கபோலீசன் கதையை ஏற்கப்போமோ? பிரமாண்டமான அண்டபகிரண்டமான, சர்வ ஜீவாதாரமான, நிச்சயமான, ஓங்காரமான, பரமான்மாவான, ஆகாய வெளியான, ரூபமான, உலகெலா முணர்ந்தோதுதற்கரிதான என்று பலவாறு வர்ணித்து வாழ்த்தும், சிவபிரான் கையில் பிரமன் தலை ஒட்டிக்கொள்ள, அதை அவர் விலக்கமாட்டாத நிலையின ரானாரென்றால், இதைவிட அவமானம் வேறென்ன உண்டு? உலகில் அரூபியாயிருக்கும் சிவனே மண்டையோட்டில் இரந்தார் என்று பொய்ச் சொன்னால், பயித்தியம் பிடித்திருக்கிற தென்றே பிறர் நினைப்பார்கள். ஆகையால் அறிவுக்கப்புறப்பட்ட கதைகளை ஆலோசித் தல் நல்லது. மதியை மயக்கும் புராணத்தை கவனிக்க வேண்டும். எதையும் ஆய்ந்தறிய வேண்டுமென்றுரைப்போன்மேல் கடுஞ்சினங்கொள்வதிலும், நம்முள்ளங்கையில் உள்ள மூட பழக்க வழக்க கட்டுகளை அவிழ்த்து உண்மை யறிதலே பேருபகாரமும், சரியான பகுத்தறிவும், தெய்வத்தன்மையுமாகும். அதுதான் நம் தேச தெய்வமாகிய பகவன் புத்தர் போதனை யாகும். கிறிஸ்துவர்களுடைய புது வருட விளையாட்டு சாமானத் திருநாட்களிலும், முஸ்லீம்களுடைய புலிவேஷ திருநாட் களிலும், இந்தியர்கள் எப்படி கலந்து கொண்டாடி வருகின்றார் களோ! அப்படிப்போலவே, பழமையான மூடப்பழக்க வழக்கங்களினால், கட்டப்பட்ட சங்கரர் மத வேதாந்தத்திலும், மாத்துவர் மத கிரியையிலும், ராமாநுஜர் மத பூஜையிலும் சிறுக சிறுக சேர்ந்து முடிவில் இந்தியர் என்ற பெயர், மாறி இந்துத் (திருடர்) என்று சொல்லிவர தலைப்பட்டு விட்டார்கள். இவைகளுக்கு மேற்குறித்த கதைகளே காரணமாகும். ஆதலால்