பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 க. அயோத்திதாஸப் பண்டிதர் திரிக்குறள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின்செல்பவர். 30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல். சுற்றத்திற்கு உறவின் முறையாரென்போருக்கு, அழகு - சிறப்பு யாதெனில், சூழவிருத்தல் - ஒருவருக் கொருவர் உதவி புரிந்து சேர்ந்து வாழ்தலேயாம். என் சகோதரன், என் மாமன், என்மைத்துனி யென்று சொல்லுங் குடும்பங்களுக்கு, சிறப்பும், வாழ்க்கையும் சுகமும் யாதெனில், ஒருவருக்கொருவர் நெருங்கி வாழ்வதுடன் ஒருவருக் கொருவர் உபகாரிகளாக விளங்குவதே என் குடும்பத்தோர், என் சுற்றத்தோ ரென்பதற் கழகாகும் சேர்ந்த வாழ்க்கைப் பெற்றும் உபகாரமற் றிருப்போருக்கு வாழ்க்கைக்கு அழகாகாவாம். திரிக்குறள். சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். 31. சூதும்வாதும் வேதனைசெய்யும். சூதும் - ஒருவரை வஞ்சினத்தாலும், வாதும் - ஒருவர் வாக்குக்கு எதிர்வாக் குரைத்தலாலும், வேதனை - துன்பத்தை, செய்யும் - அநுபவிக்க நேரிடுமென்பதாம். சூதாகும் வஞ்சக கிரியைகளையும், வாதாகுங் குதர்க்க வாதகங்களையுஞ் செய்துக்கொண்டே வருவதில்ை, விவேக மிகுந்தோ ரிவனை புறம்பேயகற்றுவதுடன் அதிகாரிகளால் வேதனையு மடைவானென்பதுங் கருத்து. 32. செய்தவமறந்தாற் கைதவமாளும். செய் - தான்செய்துவரும், தவம் - நல்லொழுக்கத்தை, மறந்தால் - செய்யாயிைன், கைதவம் - அனுபவத்திற் கை கண்ட சுகங்களானது, மாளும் - கெட்டுபோமென்பதாம்.