பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு S 5 திரிக்குறள். ஈன்றப் பொழுதிற் பெரிதுவக்குந்தன் மகனை சான்ருே னெனக் கேட்ட்த்தாய். 28. சிவத்தைப்பேனிற் றவத்திற்கழகு. சிவத்தை - உனக்குள்ள அன்பை, பேணில் - பெருக்க முயலில், தவத்திற்கு - சகசாதனத்திற்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம். திருமூலர் - திரிமந்திரம். அன்பும் சிவமும் இரண்டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவதி யாருமறிகிலார் அன்பே சிவமாவதி யாருமறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே. கோபமென்னும் அக்கினிக்குன்றின் மீதேறி யவித்து அன்பே ஒருருவுகொண்ட சாந்தரூபியாம் புத்தபிரானை குண காரணத்தால் சிவனென்றும், சதாசிவனென்றுங் கொண்டாடி வந்தார்கள். அறநெறித்தீபம். அவன்கோ லிவன்கொ லென்றையப் படாதே சிவன்கண்ணே செய்ம்மின் கண்சிந்தை - சிவன்ருனும் நின்றுக்கால் சீக்கு நிழறிகழும் பிண்டிக்கீழ் வென்றிச்சீர் முக்குடையான் வேந்து. 29. சீரைத்தேடி னேரைத்தேடு சீரை - சுக வாழ்க்கையை, தேடில் - ஆராய்வதில், ஏரை - உழுதுண்ணுஞ் செயலை, தேடு - கண்டறிந்துக்கொள் என்பதாம். அதாவது உலகத்தில் சுகவாழ்க்கையைத் தேடுபவன் பூமியைத் திருத்தியுண்ணும் வேளாளத் தொழிலை நாடுவான யின் சகலருக்கும் உபகாரியாக விளங்குவதுமன்றி தானும் சுகவாழ்க்கையைப் பெருவான் என்பதாம்.