பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 4. க. அயோத்திதாளலப் பண்டிதர் 95. கெளவைசொல்லி னெவ்வருக்கும்.பகை. கெளவை சொல் - எதிரிக்கு மற்ருெருவன் கூறிய வார்த்தை சொல்லுதலும், மற்றவன் கூறிய வார்த்தையை எதிரிக்கு சொல்லுதலும், எவருக்கும் பகை- ஒருவருக்கொரு வரை விரோதிக்கச் செய்துப் பாழ்படுத்துவதுடன் அத்தகையக் குட்டுரிை செயலால் சகலருக்கும் விரோதியாவான் என்பதாம். உடும்புக்குள்ள இரட்டை நாவைப்போல் இருவருக்கும் நேயனைப் போலிருந்து கெளவைப்போல் அவர் சொல்லை இவருக்கும் இவர் சொல்லை யவருக்குஞ் சொல்லி கலகத்தை யுண்டு செய்வோன் இருவருக்கும் விரோதியாவதுடன் இவன் இருநாக்கன் கெளவைச் சொல்னென் றுணர்ந்தோர் யாவரும் இவனைக் கண்டவுடன் பயந்து யாதொரு சொற்களையும் பேசா மல் துரத்திவிடுவார்கள், ஆத்லின் ஒருவர் சொல்லை மற்றவனுக் குச் சொல்லுங் கெளவை சொல் எக்காலும் பேசலாகாது என்பது கருத்து. 26. சந்ததிக்கழகு வந்திசெய்யாமெய். சந்ததி - புத்திர பாக்கிய விருத்திக்கு, அழகு - சிறப்பு யாதெனில், மெய் - தனது தேகத்தை, வந்தி செய்யா - அறுவகை கற்பதோஷத்திற் குள்ளாகாது கார்க்கவேண்டியதென்பதாம். அதாவது இஸ்திரிகளை மலடாக்கிப் புத்திர பாக்கியத்தைக் கெடுப்பது அறுவகைக் கருப்பைப் தோஷங்களேயாதலின் சந்ததியின் அழகைக்கோரும் பெண்கள் யாவரும் கருப்பை தோஷ முண்டாகாது காக்கவேண்டுமென்பது கருத்து. 27. சான்ருேரென்கை யீன்ருேட்கழகு. சான்ருேர் - நற்குணங்கள் யாவும் நிறைந்த ரூபி, என்கை - என்று கூறப்படுவாயிைன், ஈன்ருேன் - பெற்ற தாயாருக்கு அழகு - சிறப்பாகும் என்பதாம். தானின்ற புத்திரன் நல்வாய்மெய், நல்லூக்கம், நற்கடை பிடி என்னும் சான்ற ரூபியாய் சகலராலுங் கொண்டாடப் படுகிருனென்று பல்லோரும் புகழக் கேட்பதே பெற்றவளுக் குப் பேரழ கென்று கூறியுள்ளாள்.