பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 9.3 என்னும் பாடபேதங்களைக் கண்ணுற்றபோது இருவ ரேட்டுப் பிரதி களிலுள்ளச் செய்யுள் சிதையினும் பொருள் பொருந்தியுள்ளது கண்டு உடற்கூற்றையே வெளியிட்டுள்ளோம். சத்தமுஞ் சோதிட முமென்னு மொழிமுற் சீருக்குப் பொருந்தாதாதலினும், சோதியின் இடங்கண்டு கூறுவோரைப் பித்தரென்றுக் கூறியுள்ளதும் பிழையேயாம். எங்ங்ன மென்பீரேல் தற்காலமுள்ள பிரிட்ஷ் ஆட்சியில் (அஸ்ட்ரானமர்) என்னும் வான சாஸ்திரிகள் சோதிகளாகும் நட்சத்திரங்களுள்ள விடங்கண்டு இன்னசோதி, யினியவிடம் போமாயின் காற்றடிக்கும் மழைபெய்யு மென்று கூறுதலும், சாக்கையர்கள் குனரிப்பில் இன்னசோதி யின்னின்ன விடங்களில் மாறுபடுமாயின் சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் உண்டா மென்னுங் குறிப்பும் அனுபவத்திலும் காட்சியிலு மிருக்குங்கால் சோதியின் இடமறிந்து பலாபலன் கூறுவோரை பித்தரென்றும், பேதையரென்றுங் கூறியுள்ளது பிழையென்று துணிந்து கூறியுள்ளோம். 24. கோட்செவிக் குறளைகாற்றுடனெருப்பு. கோட்செவி-எ க்காலுங் குற்றமாகிய சொற்களையே கேட்க விரும்பும் சுரோத்திர முடையவன், குறளை-விருப்ப மானது, காற்றுட நெருப்பு-மனைகள் தீப்பட்டெரியுங்கால் காற்றுஞ் சேர்ந்துக் கொள்ளுமாயின் உள்ள மனைகளுமெரிந்து பாழாவது போல் தான் கெடுவதுடன் தன் சுற்றமுங் கெடுமென்பதாம். குடும்பத்தோர் குற்றங்களேயாயினும் நேயர்கள் குற்றங்களை யாயினும் தங்கள் செவியாரக்கேட்க விருப்ப முடையவன் மனமானது யெப்போதும் கோபமென்னுந் தணலில் எரிந்திருக்குங்கால் மேலுமேலுங் கோட்சொல் நுழை யில் காற்றுடன் சேர்ந்த நெருப்பைப்போல் உள்ள கோபாக் கினி மீறி தன்னையுந் தன் குடும்பத்தையுந் தன்னேயரையு மழிக்கு மென்றுணர்ந்த ஞானத்தாய் குற்றத்தைக் கேழ்க்கும் விருப்பமிகுத்தோன் காற்றுடன் சேர்ந்த நெருப்புக்கொப்பாய் தன்னைத்தானே தரித்துக் கொள்ளுவா னென்பது கருத்து.