பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 0 1 49. துாற்றும் பெண்டீர் கூற்றெனத்தகும். துாற்றும் - மனைவிவகாரங்களை வெளியில் துாற்றித் திரியும், பெண்டீர் - பெண்களை, கூற்றென - நசிக்குங்கால னெனத் தகும் - சொல்லுதற் கேதுவுண்டா மென்பதாம். அதாவது தனது மாமன் மாமியார் வார்த்தைகளையும், மாதுலன் மாதுலி வார்த்தைகளையும் கணவன் வார்தைகளையும், தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் சொல்லித் திரிபவள் தனது குடும்பத்தை யழிக்குங் கூற்றனுக் கொப்பாவாளென்பது கருத்து. 43. தெய்வஞ்சீறிற் கைதவமாறும். தெய்வம் - தெய்வகமாம் உள்ளதை, சீறில் - சீற்றமுறில், கைதவம் - உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டுள்ள வொழுக்க சுகமானது, மாளும் - மாய்ந்துபோ மென்பதாம். அதாவது ஒவ்வோர் மக்களுக்குமுள்ள காமாக்கினி கோபாக்கினி பசியாக்கினியாந் தேய்வினிலை மீறி சீறி நிற்குமாயின் செய்தவமும் மழிந்த தேகமாளும். அங்ங்ன மின்றி திரிபுராந்த தணலாய்த் தேய்வென்னும் நிலையுள்ள காமாக்கினி, கோபாக்கினி, பசியாக்கினி யென்னுங் குன்றின் மீதேறி சாந்த மென்னும் நீரால வித்து, தண்மெயாம் குளிர்ந்த தேகியாய் விளங்கவேண்டு மென்பதே சற்குருவின் போதமாதலின் அவற்றை பின்பற்றியுள்ள ஞானத்தாய் அகத்துள்ளவனலை யதிகரிக்கச் செய்யாதேயுங்க ளென்று கூறியுள்ளாள். தேய்வனலாகுந் திரிபுராந்தக ஸ்வயம்பிரகாச சாந்தரூபி யானேர் தேய்வன லகற்ற காரணங்கொண்டு தேவர் தேவர்க ளென்னும் பெயரைப் பெற்ருர்கள். விவேகசிந்தாமணி - சாந்தபலன். ஆசாரஞ் செய்வாராகி லறிவோடு புகழுமுண்டாம் ஆசார நன்மெயான லவனியிற்றேவராவர்.