பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 2 க. அயோத்திதாளலப் பண்டிதர் 44. தேடாதழிக்கிற் பாடாய்முடியும். தேடாது - ஒர் பொருளை தானே கஷ்டபட்டு சேகரிக்காது, அழிக்கில் - விர யஞ் செய்யில், பாடாய் - பாழாக, முடியும் - திரு மென்பதாம். ஒருவன் தேகத்தை வருத்தி ஒர் பொருளைச் சேகரிக்காது தனது முன்னேர் சேகரித்து வைத்திருந்த பொருளை கஷ்டமின்றி யழிப்பாயிைன் மறுபடியும் பொருளை சேகரிக்க வழிதெரியா மலும், சோம்பலிலுைம், பாழடைந்து போவான். 45. தையுமாசியும் வைத்தியர்க்குழவு. தையும் - தைமாதமும், மாசியும் - மாசிமாதமும், வைத்தியர் களுக்கு - மாமாத்திரர்களுக்கு, உழவு - பூமியை யுழுது பூமியின் நீராகும் பூநீரெடுக்குங்கால மென்பதாம். அதாவது, மாமாத்திரர்கள் ஆடி-ஆவணி மாதங்களில் சமுத்திரவுப்பென்னுங் கடலுப்பையும், தை - மாசி மாதங்களில் பூமியுப் பென்னும் நாதத்தையுந் தோண்டி யெடுப்பதற்கு முன், பனி காலமாகும் தையிலும், மாசியிலும் உவர்மண் பூமியை யுழுது வைத்து மீன மேஷமென்னும் பங்குனி - சித்திரையில் பூத்திருக்கும் பூமியின் நீர் ஒங்கி யெழுமிடங் கண்டு அடிபடை தோண்டி நாதமெடுத்து கடலுப்புடன் சேர்த்து வைத்திய உப்பை முடித்து வைத்துக் கொண்டு ஒடதிகளை செய்து பிணியாளருக்களித்து சுக மீவதியல்பாகும். உப்பினது போக்கும், அவற்றை ய்ெடுக்குங் காலமும், அதல்ை முடியும் வோடதிகளும், மாமாத்திரர் காலமறிந்து செய்ய வேண்டிய விதியாதலின் வைத்தியர்க ளக்காலத்தை மறவாதிருப்பான் வேண்டி தையும், மாசியும் வைத்தியர்க் குழவென்று கூறியுள்ளாள். பதஞ்சலியார் ஞானம் காக்கை யார்க் கெனுங் கம்பிதிறப்படும் காக்கை யாளுவர்ச் சாரமுங் கைக் குள்ளாம் காக்கையாற் சவுக் காரமுங் கட்டலாம் காக்கை காக்கை நடுக்கடற் காக்கையே