பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 0.5 பார்களாயின் நகரவாசிகள் யாவரும் சுகமுற்று வாழ்வது அநுபவ மாதலின் பயிரிடுங் குடிகளின் சுகத்தைக் கண்டு எங்கும் சுகமுண்டென்பதை விளக்கியுள்ளாள். 50. நிற்கக்கற்றல் சொற்றிரமாகும். நிற்க - மனதில் நிலைக்க, கற்றல் - வாசித்த, சொல் - வார்த்தை களானது, திரம் - உருதியாக, ஆகும் முடியு மென்பதாம். கற்குங் கல்வியை நிலை பெறக்கற்று தான் கற்ற கல்வியளவாய் ஒன்றைக் கூறுவாயிைன் அஃது உருதி பெற்றே நிற்கும். தான் கற்ற கல்வியை நிலைக்க வைக்காமலும், கற்றக் கல்வியினளவே நில்லாமலும் ஒன்றைக் கூறுவாயிைன் சேற்றில் நாட்டியக் கம்பம்போல் தன்னிற்ருனே திரம்பெரு தாதலின் கற்போர் யாவருந் தாங்கள் கற்றக் கல்வியை தங்களுக் குள்ளத்தில் பதியக் கற்றல் வேண்டு மென்பது கருத்தாம். 51. நீரகம் பொருந்திய வூரகத்திரு. நீர் - சலதாரையூற்றுக்கு, அகம் - இடம், பொருந்திய - அமைந்துள்ள, ஊரகத்து - தேசத்தின் கண், இரு - வீற்றிரு மென்பதாம். நீர்வளமானது நிலவளத் துாறிய வகத்து வாழ்தலே பஞ்சமற்ற வாழ்க்கைக் கிடமாதலின், நீர்வளம் பொருந்திய விடத்து வாழ்க வேண்டுமென்பது கருத்து. நீர்வளம் நிறைந்தவிடம் மக்கள் தேக சுத்தத்திற்கும், சுகத்திற்கும், தானிய விருத்திக்கு மிடமாதலின், மனே சுத்தம் வாக்கு சுத்தம் தேக சுத்தமாம் திரிகரண சுத்தத்தை நாடும் ஞானத்தாய் முதல் வாசகத்திற் கூறியுள்ள சனி நீராடென்னும் வாசகத்துக் கிணங்க இரண்டாம் வாசகத்தில் சனிக்கும் நீரூற்றுள்ள ஆரகத்து வாழென்று கூறியுள்ளாள்.