பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 க. அயோத்திதாளலப் பண்டிதர் 47. தோழனேடு மேழைமைப்பேசேல். தோழனேடு - தன் புஜபலத்துக் குதவுவோைேடு, ஏழைமை - தன் வல்லமைக் குறைவை, பேசேல் - மறந்தும் பேசாதே என்பதாம். புருஷர்களில் தோழர்களென்பதும், ஸ்திரிகளில் தோழிகளென்பதும் தங்கள் எஜமானன் எஜமாட்டிகளுக்கு ஆபத்து பந்துபோலிருந்து அஞ்சலியஸ்தராய் ஆதரிப்பவர் களாதலின் அவர்களிடத்துத் தங்கள் வல்லப்பக் குறைவை சொல்லுவதாயின் மதிப்பற்று ஆபத்துக்குதவாதென்பது கருத்து. 48. நல்லிணக்கமல்ல தல்லற்படுத்தும். நல் - நல்ல, இணக்கம் - நேயர் சேர்க்கை, அல்லது - இல்லாமற் போமாயின், அல்லல் - துன்பத்திற்கு, படுத்தும் - ஆளாக்கு மென்பதாம். நல்லவர்களை யடுத்திருத்தலும், நல்லவர்களின் வார்த்தை யைக் கேட்குதலும் நன்ருகும் அத்தகைய நல்லோர்களை யடுக்காமலும், அவர்கள் வார்த்தையைக் கேளாமலும் இருப்ப தாயின் எவ்விதத்துங் கேடு பெருகி மாளா துக்கத்துக் காளாக்கு மென்றுணர்ந்த ஞானத்தாய் நல்லோரிணக்கம் வேண்டு மென்றும் அஃதல்லாதார் அல்லற் படுவரென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளாள். 49. நாடெங்கும் வாழ்க கேடொன்று மில்லை. நாடு - நன்செய் புன்செய் பூமிகளில், எங்கும் - எங்கு முள்ளவர்கள், வாழ்க - சுகவாழ்க்கையி லிருப்பார்களாயின், கேடு - சுகக்கேடுகள், ஒன்றும் - ஒன்ருயினும், இல்லை - இராது யென்பதாம். நன்செய் புன்செய் பூமிகளைத் திருத்தி பயிரிட்டு மக்கள் வாழ்க்கை புரியுமிடத்தை நாடென்றும் அரசனும் அரசாங்கத் தோரும் வாழுமிடத்தை நகரமென்றும், வழங்கி வருபவற்றுள் நன்செய் புன்செய் தானியங்கள் செழித்திருக்குமாயின் நாட்டார் யாவருஞ் செழித்திருப்பார்கள். நாட்டார்கள் செழிப்புற்றிருப்