பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 10 7 அருங்கலைச்செப்பு. என்று முண்டாகி யிறையால் வெளிப்பட்டு நின்றது நூலென்றுணர். நன்னுால். வினையினிங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதநூலாகும். 54. நெஞ்சையொளித்திரு வஞ்சகமில்லை. நெஞ்சை - மனதை, ஒளித்து - அடக்கி, இரு இருப்பாயா யின், வஞ்சகம் - உள்ள கடுஞ்சினம், இல்லை - அகன்றுபோ மென்பதாம். தன் மனமாகிய நெஞ்சமே தனக்கு சான்ருதலின் šஅதிற்ருேன்றும் வஞ்சினம், பொருமெய், சூது, முதலியவற்றை யகற்றி நெஞ்சை நன்மார்க்கத்தினேடே யொளிப்பானுயின் அவனுக்கு துக்கமென்பது யெக்காலுமில்லையாகும். அங்ங்னமின்றி நெஞ்சை யொளித்தவர்போல் துறந்தோ ரென வேஷ மிட்டு பேதைகளை வஞ்சித்து பொருள் பரித்துண் பாருமுண்டு. அத்தகைய வஞ்சிக்கும் வாழ்க்கை பெருது நெஞ்சையொளித்திருப்பதே நலமென்று கூறியுள்ளாள். திரிக்குறள் நெஞ்சிற்றுறவார் துறந்தார் போல்வஞ்சித்து வாழ்வாரின் வன்கணுரில். 55. நேராநோன்பு சீராகாது. நேரா - தனக்கு கூடிவரா, நோன்பு - கொல்லாமெய், சீராகாது - தனக்கு சுகங்கொடா தென்பதாம். அதாவது கொல்லா விரதமென்னும் நோன்பை நோற் பவன் மற்ருெருவன் கொன்ற மாமிஷத்தைத் தின் பானுயின் தானேற்கும் நோன்பிற்கு நேராகாதென்பது கருத்து. மாமிஷம் தின்போனில்லாவிடின் கொல்வோ னதிகரிக்கான்.