பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 க. அயோத்திதாஸப் பண்டிதர் திரிக்குறள் தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின்யாரும் விலைப்பொருட்டா லூன்றருவாரில். 56. நைபவரெனினு நொய்யவுண்ரயேல் நைபவர் - வருந்தும் ஏழைகளாக, எனினும் - இருப்பினும், நொய்ய - அவர்கள் மனம் வருந்த, உரையேல் - பேசாதே யென்பதாம். நமக்குள் அடங்கி வாழக்கூடிய யேழைகளா யிருப்பினும் அவர்களது மனங்குன்ற பேசலாகா தென்பது கருத்து. 57. நொய்யவரென்பவர் வெய்யவராவர். நொய்யவரென்பவர் - ஒருவரை மனைேகப் பேசுகிற வர்கள், வெய்யவர் - கொடுஞ் சினத்தோர், ஆவர் - என்னப் படுவார்கள். ஒருவரை மனைேகப் பேசும்படியாய வார்த்தையை யுடையோர் கோபத்திற் குடிகொண்டிருப்பவ ரென்பது கருத்து. 58. நோன்பென்பது கொன்றுதின்னமெய். நோன்பென்பது - தம்மெய்யை காப்பதென்பது, கொன்று - சீவப்பிராணியை வதைத்து. தின்னமெய் - மாமிஷத்தைப் புசியா தேகியென்பதாம். தன்தேகத்தை காக்கவேண்டிய நோன்பினுட்ையோன் சீவப் பிராணிகளுக்குத் துன்பத்தைச் செய்யாது காக்க வேண்டுமென்பது கருத்து. அங்ங்னமின்றி புறமெய்யை வதைத்து தன்மெய்யை வளர்க்க வேண்டியதாயின் புற வுயிரை வதைத்துண்டு வளர்ந்த தேகம் அஃதுணர்ந்த வுபாதையை வுணர்ந்தே தீரல்வேண்டும். திரிக்குறள் தன்னுன் பெருக்கற்குத்தான் பிறிதுனுண்பா றெங்கன மானுமருள்.