பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 0.9 59. பண்ணிய பயிரிற் புண்ணியம்தெரியும் பண்ணிய - தான் வுழுது விளைத்த, பயிரில் - தானிய வளர்ச்சியில், புண்ணியம் - தனது நற்கருமம், தெரியும் - விளங்கும் என்பதாம். “சூதன் கொல்லையில் மாடுமேயு மென்னும் பழமொழிக் கிணங்க அவனவன் துற்கன் மத்தின் பாப பலனை யறிய வேண்டின் அவன் விளைத்த பயிர் மழையின்றி மடிவதும் வெட்டுக் கிளிகளால் நாசமடைவதும், புழுக்களால் மாளுவது மாகிய செயலால் விளங்கும். அவனவன் நற்கருமத்தின் புண்ணிய பலனை யறிய வேண்டின் அவன் விளைத்த பயிர் காலமழையால் ஒங்கி வளரவும், வெட்டுக் கிளிகளும் புழுக்களுமனுகாது தானிய விருத்தி கூடுவதுமாகிய செயலால் விளங்கும். புண்ணிய பலனை பண்ணிய பயிரில் காண்கவென்று கூறியுள்ளாள். 60. பாலோடாயினுங் காலமறிந்துண். பால் - பசுவின் பாலுடன், ஆயினும் - அன்னத்தை யாயினும், மற்றும் பலகாரத்தையாயினும் புசிப்பதாயின், காலமறிந்து - காலை மாலை, மத்தியமென்னும் முக்காலமறிந்து, உண் - புசிக்கக்கடவாயென்பதாம். பாலுடன் கலந்த பழத்தையாயினும், பாலுடன் கலந்த சோற்றையாயினும் உண்ணவேண்டு மாயின் காலையில் உண்ணவேண்டுமென்று பாக சாஸ்திரங் கூறியுள்ளபடியால் காலமறிந் துண்ணென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். கன்மச்சூத்திரம் காலையி லமுதும் மத்தியந் தயிர்மோர் மாலையில் வென்னிர் வழங்குக நன்றே. 61. பிறன் மனைபுகாமெ யறமெனத் தகும். பிறன் - அன்னியனுடைய, மனை - மனைவியை யிச்சித்து, புகா - அவளில்லம் நுழையாத, மெய் - தேகமே, அறம் - சத்திய தருமத்தை பெற்றது, எனத்தகும் - என்று கூறத்தகும் யென்பதாம்.