பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1.2 க. அயோத்திதாஸப் பண்டிதர் இவ்வெழுவகைப் பெயருள் ஏழு வருஷத்துள் அறியாசிறி யாளாகும் பேத மெய்யென்பது பெண்களுக்குரிய ஒர் பெயராதலின் மாதருக்குரிய பெயர்களில் பேதமே யென்பது மோர் பெயரென்று குறிப்பிட்டுள்ளாள். காரணம் முன்பே பேதமெய்க்குனம் பொருந்தியிருந்த மாதர்களாயிற்றே அவர்களை, ஏமாற்றலும், மிருகம்போல் நடத்துவதும் தகுதியல்ல அவர்களை சமமாக நேசியுங்களென்று ஆண் மக்களுக்கு அறிவுறுத்தலாம். 67. பையச்சென்ருல் வையந் தாங்கும். பைய - மெல்லெனச் சென்ருல் - செல்லுவோமாயின், வையம் - பூவுலகு, தாங்கும் - யேந்து மென்பதாம். உலகத்தின் கண் வார்த்தை மிருதுவாகவும் நடத்தை யமைதியாகவும், செயலை நிதானமாகவும் செய்து வருவோ மாயின் வையத்துள்ள சகலமக்களாலும் ஏந்திப் புகழப்படுதல் அநுபவமாதலின் சகல காரியங்களையும் நிதானித்துச் செய் வோர்களை வையந்தாங்குமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். 68. பொல்லாங் கென்பவை யெல்லாந்தவிர். பொல்லா - கொடிய, ஆங்கு - அங்கம், யென்பவை - யென்று சொல்லும்படியான, எல்லா- சகல குற்றங்களையும், தவிர் - அகற்றி விடுமென்பதாம். அதாவது தேககுற்றம், வாக்குகுற்றம் மனே குற்றங்க ளாகும். முத்தோஷங்களமைந்த பொல்லா வங்கத்தோ னென்னும் பெயரெடாது அக்குற்றங்களைத் தவிர்த்து வாழ்க வேண்டு மென்பது கருத்து. 69. போனகமென்பது வானவர் விருந்து போனகம் - காமதேனு அல்லது கற்பக விருட்சம், என்பது - என்று கூறும்படி யானது, வானவர் - மக்கள் நிலை கடந்து தெய்வநிலையடைந்தவர்கள், விருந்து - தங்களை யண்டி ைேர்க்களிக்கும் அமுத மென்னப்படும்.