பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 13 தாயுமானவர் கூறியுள்ளபடி 'போனகமமைந்ததென வக்காமதேனுநின் பொன்னடியினின்று தொழுமே” என்னுஞ் செய்யுளுக்குப் பகரமாய் காட்டிலும், குகைகளிலுந்தங்கி ஞான கருணுகரமுகமமைந்த பெரியோர்களைக் காணவேண்டி வரும். அரசர்களுக்கும், குடிகளுக்கும் அக்காலுண்டாகும் பசிதாகத்தை நிவர்த்திக்கக்கூடிய ஒரமுதமென்னப்படும். காட்டில் தங்கியுள்ளவர்களுக்குக் கேட்டதையளிக்கும் ஒர் சித்தின் நிலைக்குப் போனகமென்னும் பெயரையளித்துள் ளார்கள். காக்கை பாடியம் கேட்டவை யாவுங் கொடுக்கும் போனகம் நாட்டுள் மாரியாய் நடக்கும் வானகம் வீட்டினி லடங்கி யுள்ளொளி கண்டோர் வாட்டமொன்றில்லா வாழ்க்கையதாமே! புத்தசங்கத்தோர் பிட்சா பாத்திரத்திற்கும் போனக மென்னு மோர் பெயருண்டு, அதுகொண்டே பட்டினத்தார் வற்ருத பாத்திரமென்றுங் கூறியுள்ளார். அதற்கு பகரமாய் மண்ணிமேகலையிலுள்ள ஆபுத்திரன் காதையைக் காணலாம். அருங்கலைச் செப்பு வானகத்துட் சென்ருர் மாபாத்திர மெடுத்தார் போனகத்தா லுண்ட பொருள் கரபாத்திர மெடுத்தார் காட்சி நிலைத்தார் திரநேத்திர மமைந்த சீர். 70. மருந்தும் விருந்தும் முக்குறை யகற்றும் மருந்தும்-ஒடதியும், விருந்தும் விரும்பியுண்போர் புசிப்பும், முக்குறை-மூன்று தோஷங்களை, யகற்றும்-நீக்குமென்பதாம். அதாவது, மருந்துண்பதில்ை வாததோஷம், பித்ததோஷம், சிலேத்துமதோஷம் ஆகிய முத்தோஷங்களையும், விருந்தளிப் பதில்ை எதிரிக்குக் காலத்திலில்லா குறையும், பசியின் குறையும், பிரான துடிப்பின் குறையும் நீங்கி சுகமடைவதால் விருந்தில்ை நீங்கும் முக்குற்றங்களையும் மருந்தில்ை நீங்கும் முக்குற்றங் களையும் ஏகபாவனையால் புசிப்பிற்கட்டி பகர்ந்திருக்கின்ருள்.