பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 க. அயோத்திதாளலப் பண்டிதர் 71. மாரியல்லது காரிய மில்லை. மாரி - மழை, அல்லது - இல்லாமற் போமாயின், காரியம் - எடுக்குந் தொழில் யாவும், இல்லை - நடப்பதரிதாகுமென் பதாம். உலகத்தில் மழைபெய்யாமற் போமாயின் சகல காரியங் களுக்கும் ஆனியுண்டாய் பஞ்சமதிகரித்துப் பாழாகுமென் பதாம். 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்குமழை. மின்னுக் கெல்லாம் - வானில் மின்னல் தோன்றுவதின் சாட்சி, பின்னுக்கு மழை - பிறக்ாலத்துக்குத் தகுந்த மழைப் பெய்யுமென்பதாம். வானில் மின்னல் மீருங்கால் ஆழிநீரையுண்டு ஆகாய கருப்பங் கொள்ளுவதனுபவமாதலின் மின்னல் சாட்சியைக் கொண்டு மழையுண்டென்பதை யுணர்ந்து உழுதுண்போர் விளைக்க விளக்கியுள்ளாள். 73. மீகாமனில்லா மரக்கலமோடாது. மீகாமன் - வோட சூஸ்திரன், இல்லா - இல்லாமற் போவாயிைன், மரக்கலம் - ஒடம், ஒடாது - நீரிலோட்டுவது அரிதாகும் என்பதாம். ஒடத்தை யோட்டும் சூஸ்திரகுைம் மீகாம னில்லாவிடில் மரக்கலத்தை நீரில் வோடச்செய்வது கஷ்டமாகும். அதுகொண்டே “மாலுமியில்லா மரக்கலமேற லாகா' தென்பதும் பழமொழி. மீகாமன், மாலுமி, ஒடசூத்திரன், சுக்கானனென்னும் நான்கு தொழிற் பெயரும் நீரின் வேகமும், காற்றின் வேகமுமறிந்து ஒடத்தை வோட்டுவோன் பெயராகும். 74. முற்பகற்செய்யின் பிற்பகல்விளையும். முற்பகல் - காலையில், செய்யின் - செய்யும் வினையின் பயனைது, பிற்பகல் - மாலைக்குள், விளையும் - வெளிவரு மென்பதாம்.