பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 க. அயோத்திதாளலப் பண்டிதர் 78. மைவிழியாடன் மனையகன்ருெழுகு மைவிழியள் - கண்களில் மைதீட்டும் விலைமகள், மனை - வீட்டிற்கு, அகன்று - விலகி, ஒழுகு - நன்மார்க்கத்தில் நட வென்பதாம். கண்ணுல் விழித்து மயக்கி தனது வயப்படுத்தும் விலைமகளின் வீட்டினருகே வாழ்தல் எவ்விதத்துங் கேட்டைத் தரும் வாழ்க்கையாதலின் அவள் வீட்டின் அருகே வாழ்தல் ஒழுக்கத்திற்கு இழுக்கென்பது துணிபாம். மைவிழியாள் - ஆண்மக்களை மயக்கக்கூடிய கண்களையுடையவளென்பதும் பொருந்தும். 79. மொழிவது மறக்கி னழிவதுகருமம். மொழிவது - தனது தாய் தந்தையாராலேனும், தன்னை ஆண்டு வருபவனலேனும் கூறிய வார்த்தையை, மறக்கின் - மறந்துவிடில், கருமம் - அத்தொழிலானது, அழியும் - கெட்டுப் போமென்பதாம். தனது எஜமானகுைம் ஆண்டவன் ஏவிய மொழியை மறப்பாயிைன் அக்கருமத்திற்கே கேடுண்டாய தென்பது கருத்து. 80. மோனமென்பது ஞானவரம்பு மோனமென்பது - பற்றற்ற நிலையென்று கூறுவது, ஞானம் - அறிவினுற் கட்டப்பட்ட, வரம்பு வரப்பு என்பதாம். விவேக விருத்தியற்று வீணில் அலைந்து திரியும் மனதையடக்கி யாள்வதென்னப்படும். அதாவது விவேக மென்னும் அறிவைக்கடந்து மனமலையாது நிற்கும் சுகவாரிக் கொப்பாய பற்றற்ற நிலையென்பது கருத்து (வரம்பு - வரப்பு, அத்து, எல்லை) 81. வளவயிைனு மளவறிந்தெடுத்துண். வளவன் - தானிய சம்பத்துள்ளவன், ஆயினும் - இருப்பினும் அளவறிந்து தன் குடும்பத்துக்குப் போதுமான